மகளிர் உரிமைத் தொகை போல்! பெண்களை கைவிடாத தமிழக பட்ஜெட்! மதுரை, கோவை, திருச்சி லேடீஸுக்கு முக்கியம்!
சென்னை: மகளிர் உரிமைத் தொகையை போல் பெண்களின் பாதுகாப்புக்கு ஒரு சூப்பர் திட்டத்தை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பெண்களுக்கு மகத்தான திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
எந்த அரசாக இருந்தாலும் பெண்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் சிறப்பம்சங்கள் இடம்பெறுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் ஏற்கெனவே மகளிர் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமை பெண் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுமை சீட்டு இலவசம் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் மகளிருக்கு என்னென்ன அறிவிப்புகள் வந்துள்ளது என்பதை பார்க்கலாம்.

மகளிர்க்கு சம சொத்துரிமை வழங்கிடும் சட்டத்தை கடந்த 1989 ஆம் ஆண்டு நிறைவேற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்துத் தந்த பாதையில் வெற்றிநடை பயின்றிடும் நமது திராவிட மாடல் அரசு தமிழ்ச் சமூகத்தில் மகளிருக்கான உயர் இடத்தையும், உரிய அதிகாரத்தையும் உறுதி செய்திடும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சமூகத்தில் மட்டுமன்றி, அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சமபங்கை உறுதி செய்திடும் வகையில், வரும் 01-04-2025 முதல், 10 இலட்சம் ரூபாய் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகள், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால், அத்தகைய ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும். தற்போது மேற்கொள்ளப்படும் பத்திரப் பதிவுகளில் 75 சதவீத பதிவுகள் இந்த அறிவிப்பினால் பயன்பெற இயலும். இதன் மூலம், மகளிரின் சுயசார்பும் பொருளாதாரச் சுதந்திரமும் மேலும் உயர்ந்திடும் என்று இந்த அரசு நம்புகிறது.
மகளிர் நலன் காக்க சுய உதவிக் குழுக்கள், விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண், தோழி பணிபுரியும் பெண்கள் விடுதியென பல்வேறு முன்னோடித் திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வண்ணம் நமது அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு இலட்சம் மகளிரை தொழில்முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 20 சதவீத மானியத்துடன் 10 இலட்சம் ரூபாய் வரை வங்கிக் கடன் பெற்று, மகளிர் பல்வேறு தொழில்கள் தொடங்கிட உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும். 2025-26 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கான நிதியுதவிக்கென 225 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு இந்த அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையிலும். பிற குற்றங்களை உடனுக்குடன் கண்டுபிடித்து ஆராய்வதற்கான அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கோடு, சென்னை மட்டுமன்றி தமிழ்நாட்டின் இதர முக்கிய நகரங்களான கோவை. திருச்சி, மதுரை, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய பகுதிகளிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும். குற்றங்களைத் தடுத்திடும் வகையில் நகரெங்கும் கண்காணிப்புக் கேமராக்கள். முக அடையாளம் காணும் மென்பொருள் அமைப்பு (Face Recognition System). தானியங்கி வாகன எண் கண்டுபிடிக்கும் अ (Automatic Number Plate Recognition), ஆளில்லா வான்கலம் (Drones) அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் நுண்ணறிவு அடிப்படையிலான காணொலி பகுப்பாய்வு (Video Analysis) அம்சங்களை உள்ளடக்கிய இத்திட்டம் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.












Click it and Unblock the Notifications