"ஸ்டிக்கர்.." பேரு வச்சீங்களே, சோறு வச்சீங்களா? எடப்பாடிக்கு தங்கம் தென்னரசு தடாலடி கேள்வி
சென்னை: பெத்த பிள்ளைக்கு பேரு வச்சீங்களே அதற்கு சோறு வச்சீங்களா என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை கொடுத்து வருகிறது. இது தரமானதாக இல்லை, பொருட்களின் எடை குறைவு போன்ற குறைப்பாடுகள் இருப்பதாக அதிமுக குற்றம்சாட்டி வருகிறது.
அது போல் பொங்கல் பரிசு பொருட்களை கொள்முதல் செய்ய தமிழகத்தில் நிறைய நிறுவனங்கள் இருக்கும் நிலையில் அவற்றை வெளிமாநிலங்களில் கொள்முதல் செய்வது ஏன்?

இந்தி திணிப்பு
அந்த பொருட்களில் இந்தியில் பெயர்களும் எழுதப்பட்டிருக்கிறது. அப்படியெனில் இந்தியை வீடுதோறும் திணிக்கும் பணியை திமுக அரசு செய்கிறதா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் எழுப்பியுள்ளனர்.

பொங்கல் பரிசு பொருட்களில் தரம் இல்லை
இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக அதிமுக கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில் திமுக என்பது பெரிய ஆலமரம், ஆனால் அதிமுக ஒரு காந்தாரி மடமாகத்தான் உள்ளது. திமுகவின் சின்னமே உதயசூரியன். திமுகவின் திட்டங்கள் கோடி சூரியன் ஆகும். அதற்கு பிற இடங்களில் இருந்து வெளிச்சம் பெறத் தேவை இல்லை.

கரும்பில் கூட அதிமுக ஸ்டிக்கர்
அதன் ஒளி வேறு சில உதிரி நட்சத்திரங்களுக்கே தேவைப்படும். திமுக அரசின் திட்டங்களுக்கோ, திமுகவுக்கோ எந்த விளம்பர வெளிச்சங்களோ தேவை இல்லை. எனவே விதைக்கிற நேரத்தில் வெளியூருக்கு போய்விட்டு அறுக்கிற நேரத்தில் நாங்கள் இருக்கிறோம் என்பதுபோல அதிமுக செயல்பட வேண்டாம்.

ஸ்டிக்கர் ஒட்டும் கலாச்சாரம்
அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு வழங்கப்பட்ட கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடினார்கள். ஸ்டிக்கர் ஒட்டும் கலாச்சாரம் அதிமுகவில்தான் தோன்றியது. ஆனால் திமுக ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில்தான் சென்னை வெள்ளத்தின்போது தன்னார்வலர்களிடம் இருந்து வந்த நிவாரண பொருட்களில் கூட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

ஓமந்தூரார் மருத்துவமனை
திமுக கொண்டு வந்த திட்டங்களில் அதிமுக ஸ்டிக்கர் ஒட்டிய போது முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அமைதியாகத்தான் இருந்தார். புதிய சட்டசபையை ஓமந்தூரார் மருத்துவமனையாக மாற்றி ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டதும் அவர்கள்தான். பிள்ளைக்கு பேர் வைத்தீர்களே சோறு வைத்தீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது திமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு அதிமுக ஆட்சியில் சொந்தம் கொண்டாடி பெயர் வைத்தீர்களே, அந்த திட்டங்கள் செயல்படுவதற்கு நிதி ஒதுக்கினீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
திருமங்கலம் வாக்காளர்களுக்கு திரும்பவும் திருவிழா.. போட்டி போட்டு தயாராகும் தலைகள்.. அடைமழை தான்! -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட் -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
கொங்கில் கூட்டணிக்கு நோ சீட்.. ஸ்டாலினிடம் விடாப்படியா நின்ற தலைகள்! நேர்காணலில் நடந்த திடுக் விவாதம்











Click it and Unblock the Notifications