3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது" என்று பொருள்படும்படிதான் திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார். ஆனால் அவரது பேச்சை திரித்து பரப்புகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். மேலும், "ஆட்சிக் கலைப்பு - கவிழ்ப்பு என்பது எங்கள் நிலைப்பாடு அல்ல", மக்கள்தான் களைத்துப் போய்விட்டார்கள் என அவர் கூறினார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக பனையூர் பாபு திமுகவில் இணைந்தார். இந்த இணைப்பு விழாவில் பேசிய முக ஸ்டாலின், இன்றைக்கு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி, எப்படிப்பட்ட ஆட்சி என்பதெல்லாம், நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே, இந்த ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில், புதிய ஆட்சி அமைந்த ஆறு மாதங்களுக்கு, இதைப்பற்றி பேசப் போவதில்லை எனக் கூறினேன்.

Thangam Thennarasu MK Says Stalin Remarks on TVK Government Are Being Misinterpreted

3 மாதங்களாவது ஆட்சி தாங்குமா?

ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்பே, பேச வேண்டிய ஒரு சூழ்நிலை வந்துவிடுமோ என்ற அச்சம்தான் இருந்து கொண்டிருக்கிறது. அதை பலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். விமர்சனங்கள் எல்லாம் வருகின்றன. இன்னும் 6 மாதங்கள் அல்ல.. 5 மாதங்கள் அல்ல.. 3 மாதங்களாவது ஆட்சி தாங்குமா? என்ற கேள்விக்குறியோடுதான், இன்றைக்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது" என்று பேசியிருந்தார்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில், "மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை 3 மாதத்தில் கவிழ்ந்துவிடும் என்று கூறுவது தவறு.. இதனை எடப்பாடி சொன்னாலும் தவறு தான்.. ஸ்டாலின் சொன்னாலும் தவறு தான்.. திமுக கூட்டணி என்ற ஒன்றே தற்போது தமிழ்நாட்டில் இல்லை என்று காட்டமாக பேசியிருந்தார். இந்த நிலையில் ஸ்டாலின் அவ்வாறு பேசவில்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

தங்கம் தென்னரசு விளக்கம்

தமிழ்நாட்டில் புதிதாக ஒரு ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதமும் டிவியைப் பார்த்தாலும் நாளிதழ்களைத் திருப்பினாலும் கொலையும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைகளும், போதை மருந்து நடமாட்டமும் தான் செய்திகளாக இருக்கின்றன. பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஆளும் கட்சியான த.வெ.க. நிர்வாகிகளே சம்பந்தப்பட்டு உள்ளனர். ஆளும்கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், சொந்தக் கட்சிக்காரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அந்தப் பெண்ணால் குற்றம் சாட்டப்படும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ மீது இதுவரை நடவடிக்கை இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியை விட்டு நீக்கி இருக்கிறது தூய சக்தி என்று கபட வேடம் போடும் அரசு. "இந்த ஆட்சியை ஆறு மாதம் விமர்சிக்க மாட்டோம்" என்று எங்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லியிருந்தாலும், நிலைமை மிக மோசமாகப் போய்வரும் நிலையில் அவர் விமர்சனம் செய்தார். "ஆறு மாதம் அல்ல, மூன்று மாதம் கூட தாங்காது என்ற நிலைமையில் தான் ஆட்சி போய்க்கொண்டு இருக்கிறது" என்று தலைவர் அவர்கள் பேசினார்கள்.

திரித்து செய்தி பரப்பப்படுகிறது

ஆனால், மூன்று மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அவர் சொன்னதாகத் திரித்து செய்தி பரப்பப்படுகிறது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் செய்தியாளர்கள் கேட்டபோது, தி.மு.க. தலைவர் அப்படி பேசியிருக்கக் கூடாது என்று பேசி உள்ளனர். ஆட்சி கவிழும் என்று தலைவர் அவர்கள் பேசவுமில்லை; அது அவரது நிலைப்பாடும் அல்ல! "ஆறு மாதம் வரை, இந்த ஆட்சி பற்றி விமர்சித்துப் பேசப் போவதில்லை" என்று அவர் சொல்லியிருந்தார்.

ஆனால் நாள்தோறும் கொலை, கொள்ளை, அரிவாள் வெட்டுகள், போதை மருந்துகள் நடமாட்டம், பெட்ரோல் குண்டு வீச்சுகள், மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம், பாலியல் வன்கொடுமைகள் நடப்பதைப் பார்க்கும் போது, இதை விமர்சிக்காமல் எப்படி இருக்க முடியும் என்ற பொருளில், "மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது" என்று பொருள்படும்படிதான் சொன்னார்கள்.

ஆசை அறுபது நாள் என்பார்கள். ஆனால் இன்றைய ஆளும் கட்சிக்கு வாக்களித்தவர்கள் ஒரு வாரம் தான் அமைதியாக இருந்தார்கள். சமூக வலைத்தளங்கள் முழுக்கவே ஆளும் கட்சிக்கு எதிரான ஆவேசமான கருத்துகளைத்தான் மக்கள் சொல்லி வருகிறார்கள். இதைத்தான் தலைவர் அவர்கள் தனது உரையில் சுட்டிக் காட்டினார்கள். கலைப்பு, கவிழ்ப்பு எண்ணத்தோடு அல்ல. மக்களே களைத்துப் போய்விட்டார்கள் அதற்குள்!" என்று ட்வீட் வெளியிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+