தமிழக அரசு வெளியிட்ட வலிமை "அப்டேட்".. தல ரசிகர்களும் குஷி.. பொதுமக்களும் டபுள் ஹேப்பி
சென்னை: வலிமை என்ற பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு முதல் தமிழக அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் தொழில்துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை அளித்தார். அதில் விருதுநகரில் ரூ 400 கோடியில் ஒருங்கிணைந்த ஆடை பூங்கா அமைக்கப்படும். மின்வாகன உற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்கும் வகையில் மின்வாகன கொள்கை வெளியிடப்படும்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் 500 ஏக்கர் பரப்பில் ரூ 5.90 கோடியில் உப்பு உற்பத்தி தொடங்கப்படும். கிருஷ்ணகிரி சூளகிரி சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ 300 கோடியில் நகர் திறன் பூங்கா உருவாக்கப்படும். திருவள்ளூர் மாவட்டம் செங்காத்தாகுளத்தில் ரூ.250 கோடியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.

வலிமை அரசு சிமெண்ட்
வலிமை என்ற பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அரசு சிமெண்ட் வணிகப்பெயருடன் வலிமை என்ற புதிய பெயர் கொண்ட சிமெண்ட் இந்த ஆண்டு வெளிச்சந்தையில் தமிழக அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்படும். தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம் ஆகியவற்றுடன் திருக்குறள் வகுப்புகளும் திருக்கோயில்களில் நடத்தப்படும்.

தொழில் பாதிப்பு
மழைக்கால தொழில் பாதிப்பு நிதியுதவியாக உப்பளத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ 5000 வழங்கப்படும். தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும், தமிழில் எழுதும் நடைமுறையையும் அனைவரும் பின்பற்ற வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புகள் வலிமை சிமென்ட் குறித்த அறிவிப்புகளை அஜித் ரசிகர்கள் வரவேற்கிறார்கள்.

தயாரிப்பாளர் போனி கபூர்
தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் கடந்த 2 ஆண்டுகளாக நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்தில் நடிப்பவர்கள் குறித்த விவரங்கள் மட்டுமே வெளியானது. பின்னர் நீண்ட காலமாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கோ பர்ஸ்ட் டிராக்கோ எதுவும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு அலப்பறை செய்தனர்.

மோடி முதல் வானதி வரை
கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அஷ்வினிடமும் பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலியிடமும் மைதானத்தில் தல ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டனர். அவரும் அஷ்வினிடம் வலிமை அப்டேட் என்றால் என்ன என கேட்டிருந்தார். அது போல் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது அவரை வரவேற்க வைத்திருந்த விளம்பர பலகைகளின் பின்புறம் வலிமை அப்டேட் என கேட்டிருந்தார். இது போல் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி ஸ்ரீனிவாசனிடமும் வலிமை அப்டேட்டை நெட்டிசன்கள் கேட்டனர்.

அஜித் அறிவுரை
அதற்கோ அவர் நான் தேர்தலில் வெற்றி பெற்றால் நிச்சயம் அப்டேட் கிடைக்கும் என கிண்டலாக தெரிவித்திருந்தார். "நேரம் வரும் போது உரிய அப்டேட்டுகள் கிடைக்கும். அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்கவும்" என நடிகர் அஜித் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து அண்மையில் வலிமை படத்தில் இடம்பெற்ற பர்ஸ்ட் சாங் வெற மாதிரி பாடல் வெளியானது. இதனால் தல ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் வலிமை என்ற பெயர் இன்றைய சட்டசபையிலும் ஒலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications