“பெரியார், அண்ணா, கலைஞர்”.. பட்ஜெட் தொடக்கமே சரவெடி -தங்கம் தென்னரசுவின் முத்து முத்தான அறிவிப்புகள்
சென்னை: 2024 தமிழ்நாடு பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தொடக்கத்திலேயே பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதியின் பெயரை மேற்கோள் காட்டி திட்டங்களை அறிவித்து இருக்கிறார்.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு கூடிய நிலையில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட்டின் தொடக்கத்தில் இருந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் அவர், திராவிட இயக்க தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரது பெயர்களை சுட்டிக்காட்டி அவர்கள் பெயரிலும், அவர்களின் ஆக்கங்களின் பெயரிலும் திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

"தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்ல உதவும் வரவு செலவுத் திட்டத்தை உருவாக்கிட வேண்டிய தேவை எழும்போதெல்லாம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா. முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழிகாட்டுதல்கள் மட்டுமே கலங்கரை விளக்கமாய் எங்களுக்கு அமைந்தன." என்று குறிப்பிட்டு தனது அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கினார்.
பேரறிஞர் அண்ணா: குறிப்பாக திமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணா எழுதிய 'மாபெரும் தமிழ் கனவு' என்ற புகழ்பெற்ற நூலின் பெயரை தலைப்பாக 7 அம்ச திட்டங்களை தங்கம் தென்னரசு அறிவித்து இருக்கிறார். சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு, அறிவுசார் பொருளாதாரம், சமுத்துவ நோக்கில் மகளிர் நலன் என 7 அம்சங்களை அறிவித்து இந்த பட்ஜெட்டின் சாராம்சத்தை விளக்கினார்.
கலைஞர் கருணாநிதி: அதன் தொடர்ச்சியாகதான் சிக்சர் அறிவிப்பை கலைஞர் கருணாநிதி பெயரில் வெளியிட்டார் தங்கம் தென்னரசு. தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் குடிசைகளை மாற்றி அனைவருக்கும் நிரந்தர கான்கிரீட் வீடுகள் அமைத்துத் தரப்படும் நோக்கில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் கிராமப்புறங்களில் மொத்தம் 8 லட்சம் குடிசை வீடுகளில் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்குடன் 2030 ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
குறிப்பாக ஒரு வீடு ரூ.3.5 லட்சம் செலவில் 2024 - 25 ஆம் ஆண்டுக்கும் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவித்தார். இந்த புதிய திட்டம் ;கலைஞரின் கனவும் இல்லம்' என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். இதற்காக வரும் நிதியாண்டில் ரூ.3,500 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என அவர் உறுதியளித்தார்.
பெரியார்: அதன் தொடர்ச்சியாக தந்தை பெரியாரின் பெயரை மேற்கோள் காட்டி சிறப்பான அறிவிப்பை அவர் வெளியிட்டார். 1919 ஆம் ஆண்டு 105 ஆண்டுகளுக்கு முன்பே காவிரி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்து 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் நீர் தேக்கம் செய்து ஈரோடு நகரெங்கும் குழாய்களில் பாதுகாப்பு குடிநீர் வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம் செய்து நிகழ்த்திக் காட்டியவர் அன்று ஈரோடு நகர்மன்ற தலைவராக பதவி வகித்த தந்தை பெரியார் என்று அவர் குறிப்பிட்டார்.
பெரியாரின் வழியில் நடைபெற்று வரும் திராவிட மாடல் அரசு கடந்த 3 ஆண்டுகளில் ஊரக பகுதிகளுக்கு 46 லட்சம் குடிநீர் இணைப்புகளை வழங்கியதுடன், ரூ.365 கோடி மதிப்பீட்டில் 2000 புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் இந்த ஆண்டு அமைக்கப்படும் என சிறப்பான திட்டத்தை தங்கம் தென்னரசு அறிவித்தார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications