இளையராஜா பத்தி இவ்ளோ பேசறீங்களே.. தீராத பிரச்சினை நாட்ல எவ்வளவோ இருக்கு! பேசறீங்களா.. தங்கர் பச்சான்
சென்னை: வேறு எதுவுமே இல்லையா, இளையராஜா கூறிய கருத்து மட்டும்தான் தமிழக மக்களின் முதன்மையான சிக்கலா என இயக்குநர் தங்கர் பச்சான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை கண்டால் அம்பேத்கரே பெருமைபடுவார் என அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார்.
மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். பாரதிராஜாவின் கருத்துக்கு ஆதரவு கருத்துகளும் உள்ளன.

எம்பி பதவி
இந்த நிலையில் மத்திய அரசு வழங்கும் எம்பி பதவிக்கு ஆசைப்பட்டுதான் இளையராஜா இப்படியொரு பொருத்தமில்லாத ஒப்பீட்டை செய்துள்ளார் என விமர்சனம் எழுந்தது. எனினும் மோடி குறித்த தனது பேச்சை தான் எக்காரணத்தை கொண்டும் வாபஸ் பெற மாட்டேன் என இளையராஜா தெரிவித்துள்ளார்.

வேறெதுமே இல்லையா
இதுகுறித்து இயக்குநர் தங்கர் பச்சான் கூறுகையில் "வேறதுவுமே இல்லையா? இளையராஜா கூறிய கருத்து மட்டும்தான் இப்பொழுது தமிழ்நாட்டு மக்களின் முதன்மையான சிக்கலா? கேள்வி எழுப்பவும், போராடவும், வாதங்கள் புரிவதற்கும் வேறெதுவுமே இங்கே இல்லையா?

திசை திருப்பும் அரசியல் பிழைப்பு
மக்களின் கவனத்தை திசை திருப்பும் அரசியல் பிழைப்புவாதிகளும், ஊடக பிழைப்புவாதிகளும் இதே போன்று மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிலவும், குடிநீர் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, எரி பொருள் விலை உயர்வு, தொடர் மின் வெட்டு, விவசாயிகளின் தீராத சிக்கல்கள், வரி உயர்வு, நீட் போன்ற தீராத முதன்மை சிக்கல்கள் குறித்து இதே போல் இரவும் பகலும் பேசி தீர்வு காண்பீர்களா?" என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஆதரவும் எதிர்ப்பும்
கடந்த சில நாட்களாக இளையராஜா குறித்து ஓயாமல் ஆதரவுகளும் எதிர்ப்புகளும் வருகின்றன. ஏ.ஆர். ரஹ்மான் போல் தமிழ் இனத்திற்கு ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்யுங்கள் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், இளையராஜாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அது போல் இளையராஜாவை விமர்சித்து எதையும் பேசக் கூடாது என திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக உதயநிதி கூறியிருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications