திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி
சென்னை: முன்னாள் எம்எல்ஏ தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவை திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் தனியரசு தொகுதி கோரியிருந்த நிலையில் இன்னும் வழங்கப்படாததால் அவர் அதிருப்தியடைந்துள்ளார்.

நடைபெற உள்ள சட்டசபை தேர்லையொட்டி தமிழகத்தில் திமுக கூட்டணியில் பல புதிய கட்சிகள் இணைந்தன. தேமுதிக, எஸ்டிபிஐ உள்பட பல கட்சிகளை நாம் கூறலாம்.
ஏற்கனவே இருக்கும் காங்கிரஸ், விசிக, 2 கம்யூனிஸ்ட், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சி உள்பட மொத்தம் 21 கட்சிகளும் பிரமாண்டமான கூட்டணியாக திமுக வலம் வருகிறது.
தனியரசுக்கு ஒதுக்கப்படவில்லை
இந்த கூட்டணியில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையும் இருந்தது. இதன் தலைவராக தனியரசு உள்ளார். இவர் முன்னாள் எம்எல்ஏ ஆவார். இந்நிலையில் தான் திமுக கூட்டணியில் தனியரசு ஒரு தொகுதி கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக திமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். நேற்றைய தினம் தனியரசு இந்த பேச்சுவார்த்தையை நடத்தினார். ஆனால் தற்போது வரை தனியரசுக்கு தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.
விலக முடிவு
இதனால் தனியரசு அதிருப்தியாகி உள்ளார். இந்நிலையில் தான், அவர் திமுக கூட்டணியில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்த ஆலோசனையை தொடர்ந்து அவர் தனது முடிவை அறிவிக்க உள்ளார். திமுக சார்பில் தொகுதி ஒதுக்கப்படாவிட்டால் அவர் கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2 முறை எம்எல்ஏ
தனியரசு இதற்கு முன்பு அதிமுக கூட்டணியில் இருந்தார். கடந்த 2011ம் ஆண்டில் அதிமுக கூட்டணியில் தனியரசு நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தொகுதியில் போட்டியிட்டு 31,018 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதன்பிறகு 2016 சட்டசபை தேர்தலில் தனியரசு காங்கேயம் தொகுதியில் 13,135 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மீண்டும் அவர் கொங்கு பெல்ட்டில் களமிறங்க தயாராகி வரும் நிலையில் தான் திமுக சீட் ஒதுக்குவது பற்றி இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை.
திமுகவுக்கு பின்னடைவு
திமுக கூட்டணியில் மொத்தம் 21 கட்சிகள் இருந்தன. இதில் ஏற்கனவே வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டணியில் இருந்து விலகியது. வேல்முருகன் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். வடமாவட்டங்களில் பல தொகுதிகளில் செல்வாக்கு மிக்க தலைவராக உள்ளார்.
அவரது விலகல் ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி உள்பட வடமாவட்டங்களில் இருக்கும் சில தொகுதிகளில் திமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இப்படியான சூழலில் தனியரசு விலகினால் அது திமுகவுக்கு இன்னும் மைனஸாகும்.
-
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி















Click it and Unblock the Notifications