காசா குழந்தைகளின் நெஞ்சை குளிர வைத்த தஞ்சை தமிழர்! பரவலாக ஷேராகும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலஸ்தீன-இஸ்ரேல் போரில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். தற்போது போர் நிறுத்தப்பட்டிருப்பதால் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இந்த பணிகளுக்கு தஞ்சாவூரை சேர்ந்த தமிழர் ஒருவர் உதவி செய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசாவில் குடிநீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில், இவர் குடிநீரை அனுப்பி வைத்திருக்கிறார். குடிநீர் டேங்க் பின்புறத்தில் தமிழ்நாடு என்றும், தஞ்சை மாவட்டம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

gaza thanjavur tamil nadu

இந்தியா-பாகிஸ்தான் போல, இஸ்ரேலும்-பாலஸ்தீனமும் பாம்பும் கீரியும் போல. கடந்த ஆண்டு அக்டோபரில் இரு நாடுகளுக்கு இடையில் போர் வெடித்தது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை செய்ய, போர் உக்கிரமடைந்தது. பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் எனும் ஆயுதம் ஏந்திய அமைப்பை ஒழிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, காசா முழுவதும் குண்டு மழையை பொழிந்தது இஸ்ரேல். போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடம் தேடி புலம் பெயர்ந்தனர்.

போரில் சுமார் 46,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் போரில் கொல்லப்பட்டனர். ஆனால் இன்று வரை ஹமாஸ் அமைப்பு ஒழிக்கப்படவில்லை. ஆக போரின் நோக்கம் பொதுமக்களை கொல்வதுதானா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. உயிரிழப்புகளை தாண்டி போர் வேறு சில கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் எனில் போலியோ நோய் பாதிப்பு. சில பத்தாண்டுகளுக்கு முன்னரே போலியோவை பாலஸ்தீன அரசு ஒழித்துவிட்டது.

ஆனால் போர் காரணமாக மீண்டும் காசாவில் போலியோ பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. மறுபுறம் இத்தனை ஆண்டுகளாக உழைத்து எழுப்பப்பட்ட அத்தனை கட்டிடங்களும் துண்டு துண்டாக சிதறியுள்ளன. எனவே இதையெல்லாம் சரி செய்யும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு வெளிநாடுகளிலிருந்து சில தொண்டு நிறுவனங்களும், தனிநபர்களும் உதவி செய்து வருகின்றனர்.

காசா மக்களுக்கு குடிநீரும், உணவும், தங்குவதற்கு கூடாரமும் உடனடி தேவையாக இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழர் ஒருவர், காசா மக்களுக்கு குடிநீர் அனுப்பி வைத்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. வீடியோவில் இருக்கும் தண்ணீர் டேங்க் வண்டியின் பின்புறம்,

பண்டாரவாடை கிராமம்,
பாபநாசம் தாலுக்கா,
தமிழ்நாடு-இந்தியா

என எழுதப்பட்டிருக்கிறது. தண்ணீரை பிடிக்க காசா குழந்தைகள் பிளாஸ்டிக் பாட்டில்களுடன் மகிழ்ச்சியுடன் ஓடி வருவது வீடியோவில் பதிவாகியுள்ளது. தமிழர்களின் மனிதநேயம் கடல் தாண்டி எதிரொலிக்கிறது என இந்த வீடியோவுக்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ குறித்து உங்கள் கருத்துகளை பகிருங்கள் வாசகர்களே!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+