இப்படியே போனால்.. சென்னையை இந்த ஊர்.. எதிர்காலத்தில் பீட் செய்துவிடும்.. சத்தமின்றி நடக்கும் புரட்சி
சென்னை: தஞ்சாவூர் தாலுகாவில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தின் அமைதியான நிலப்பரப்புகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் TIDEL நியோ தஞ்சாவூர் நவீனத்துவம் மற்றும் புதுமையின் கலங்கரை விளக்கமாக மாறி உள்ளது. இந்த டைடல் பார்க் கட்டுமானம் மிக வேகமாக நடந்து தற்போது நிறைவு பெறும் சூழலில் உள்ளது.
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் ஐடி பார்க் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடந்தது. தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா - முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இந்த நிகழ்வில் முன்னிலை வகித்தனர். அதில், சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் என்று ஒரே நாளில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொழில்துறை அமைச்சர் என்ற முறையில் டிஆர்பி ராஜா முன்னெடுப்பில் இந்த பணிகள் நடந்தன.

92.50 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கடந்த சில மாதங்களில் மிக வேகமாக இந்த கட்டிடம் கட்டப்பட்டு தற்போது எழுப்பப்பட்டு உள்ளது.
எங்கே அமைகிறது?: தஞ்சாவூர் தாலுகாவில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தின் அமைதியான நிலப்பரப்புகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் TIDEL நியோ தஞ்சாவூர் நவீனத்துவம் மற்றும் புதுமையின் கலங்கரை விளக்கமாக மாறி உள்ளது. 3.4 ஏக்கர் பரப்பளவில், இந்த மினி கட்டிடக்கலை அற்புதம், 55,000 சதுர அடியில் கணிசமான கட்டமைக்கப்பட்ட பரப்பளவைக் கொண்டுள்ளது, இது ஸ்டார்ட்அப்கள் மற்றும் ஐடி முயற்சிகளின் ஆற்றல்மிக்க தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

TIDEL நியோ தஞ்சாவூரில், புத்தாக்கமானது, வணிகங்களை மேம்படுத்தும் வகையில் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன வசதிகளுடன் செயல்பாட்டைச் சந்திக்கிறது. நீங்கள் வளரும் தொடக்கமாக இருந்தாலும் அல்லது அனுபவமுள்ள தொழில்முனைவோராக இருந்தாலும், எங்கள் பிரீமியம் அலுவலக இடங்கள் படைப்பாற்றலை வளர்ப்பதற்கும் வெற்றியை ஈட்டுவதற்கும் சரியான சூழலை வழங்குகின்றன.
தஞ்சாவூரின் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 1.8 கிமீ தொலைவில் மூலோபாயமாக அமைந்துள்ளது, மேலும் மீனாட்சி மருத்துவமனை மற்றும் தமிழ் பல்கலைக்கழகம் (முறையே 1.4 கிமீ மற்றும் 1.7 கிமீ) போன்ற முக்கிய அடையாளங்களுக்கு அருகாமையில், TIDEL நியோ தஞ்சாவூர் இணையற்ற அணுகலை வழங்குகிறது. இந்த முதன்மையான இருப்பிடம் இணைப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் தடையற்ற வணிகச் செயல்பாடுகளையும் எளிதாக்குகிறது, இது முன்னோக்கிச் சிந்திக்கும் நிறுவனங்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.

இந்த டைடல் பார்க் கட்டுமானம் மிக வேகமாக நடந்து தற்போது நிறைவு பெறும் சூழலில் உள்ளது.
ஹை ரைஸ் : இதற்காக இந்த மூன்று மாவட்டங்களில் பல்வேறு விதிகள் மாற்றப்பட உள்ளன. ஐடி பார்க்க தொடங்க வசதியாக மின்சார சலுகைகள் , பல மாடி கட்டிடம் கட்ட வசதியாக எப்எஸ்ஐ சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளன.

சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் நியோ டைடல் பூங்கா வகை பூங்கா அமைக்கப்படும். அதாவது சென்னையில் உள்ள மினி வகை ஐடி பூங்காவாக இது இருக்கும். இதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. பல மாடி கட்டிடங்களுடன், ஹை ரைஸ் ஐடி பார்க்குகள் போல இந்த மாதிரிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications