மக்களின் நிலை போல் கவலையும் துயரமும் தரக்கூடியது வேறொன்றுமில்லை... தங்கர் பச்சான்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கர்பச்சான் முதலில் ஒரு நல்ல ஒளிப்பதிவாளர். பாலு மகேந்திரா ஒளிப்பதிவுக்குப் பிறகு பலர் மனதிலும் ஒளிப்பதிவில் தனி இடம் பிடித்தவர் தங்கர் பச்சான்.
இவருக்குள் நல்ல எழுத்தாளர், வசனகர்த்தா, இயக்குனர் என்று ஒளிந்து இருந்தவர்கள் எல்லாம் தாமதமாகத்தான் வெளியில் வந்தனர். இவர் சமீபத்திய அரசியல், மக்களின் நிலை இது குறித்தெல்லாம் மனம் வருந்தி தமது ட்வீட்டர் வலைத்தளத்தில் பதிவுகள் இரண்டை வெளியிட்டுள்ளார்.

அவை உண்மையை உரக்க சொல்வதாக அவரை பின் தொடர்பவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
— தங்கர் பச்சான் (@thankarbachan) April 6, 2019
"அரசியல் கட்சிகள் என்னும் பெயரில் பொறுக்கித் திண்பவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு ஓட்டுக்களுக்கு அலையும் கூட்டம் ஒரு பக்கம், மக்களின் உண்மை மன நிலையை வெளிப்படுத்தாமல் அவர்களிடமிருந்து பொறுக்கித் தின்பதற்காக சில தொலைக்க காட்சிகளும், பத்திரிகைகளும் கருத்து கணிப்புக்கள் எனும் பெயரில் நடத்தும் நாடகங்கள் ஒரு புறம் என இது மட்டும்தான் தற்போது தமிழகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது.
இதற்கிடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் மக்களின் நிலை போல் கவலையும் துயரமும் தரக்கூடியது வேறொன்றுமில்லை. என்று பதிவிட்டுள்ளார். தமது இன்னொரு பதிவில் இப்படி குறிப்பிட்டுள்ளார்...
— தங்கர் பச்சான் (@thankarbachan) April 1, 2019
அரசியலை தொழிலாக நடத்துபவர்களுக்குத்தான் இனிமேல் அரசியலில் இடம். அப்படிப்பட்டவர்களைத்தான் மக்களும் ஆதரிக்கிறார்கள். ஊடகங்களும் அவர்கள் பின்னால் தான் ஓடிக்கொண்டிருக்கின்றன என்று வேதனை தெரிவித்துள்ளார் தங்கர்பச்சான்.












Click it and Unblock the Notifications