பெரியாருக்கு தலைவர் முருகன் வாழ்த்து சொல்கிறார்..பெரியாரிஸ்ட் என்கிறார் குஷ்பு! அட..அந்த பாஜகவா இது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் இன்னமும் பெரியாரிஸ்ட்தான் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்தார் நடிகை குஷ்பு. தமிழக பாஜகவில் தந்தை பெரியார் குறித்த போக்கு மாற்றம் அதிகரித்து வருவதையே இது வெளிப்படுத்தி இருக்கிறது.

கழகங்கள் இல்லாத தமிழகம் என்பதுதான் தமிழக பாஜகவின் முழக்கம். தந்தை பெரியாரை கூட ஈ.வே.ராமசாமி என்றும் ஈ.வே.ரா. என்றும் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்றும்தான் பாஜகவின் பல மூத்த தலைவர்கள் அழைத்தும் வருகின்றனர்.

பாஜகவும் பெரியாரும்

பாஜகவும் பெரியாரும்

திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப்பட்டது போல தமிழகத்திலும் ஈ.வே.ரா சிலைகள் அகற்றப்படும் என்று பகிரங்கமாக அறிவித்தவர் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. ஆனால் அண்மைக்காலமாக தமிழக பாஜகவில் தந்தை பெரியார் குறித்த மாற்றங்கள் வெளிப்படுகின்றன.

பெரியார் குறித்து விவாதங்கள்

பெரியார் குறித்து விவாதங்கள்

பாஜக தலைவர் முருகன் உள்ளிட்டோர் தந்தை பெரியார் என குறிப்பிடுகின்றனர். சமூக நீதிக்காகப் போராடிய தந்தை பெரியாருக்கு ஏன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கக் கூடாது என்பது தமிழக பாஜக தலைவர் முருகனின் கேள்வி. அவரது நிலைப்பாடு குறித்து தமிழக பாஜக தலைவர்களிடையே விவாதங்களும் சர்ச்சைகளும் நீடிக்கின்றன.

நான் பெரியாரிஸ்ட்தான்

நான் பெரியாரிஸ்ட்தான்

இந்நிலையில் டெல்லியில் பாஜகவில் திங்கள்கிழமையன்று இணைந்த நடிகை குஷ்பு இன்று சென்னையில் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, நான் இன்னமும் பெரியாரிஸ்ட்தான்.. பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் பெரியார். தலித் மக்களின் மீதான கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் பெரியார். அதைத்தான் பாஜகவும் செய்கிறது. நான் இப்பவும் பெரியாரிஸ்ட் என்று சொல்கிறேன் என்றார்.

கொள்கைகள் அனைத்துக்கும் தலையாட்டவில்லை

கொள்கைகள் அனைத்துக்கும் தலையாட்டவில்லை

மேலும் பெரியாரின் ஒவ்வொரு கொள்கைக்கும் தலையாட்டிக் கொண்டு போகவும் முடியாது. பெரியார் அவர்கள் காங்கிரஸை எதிர்த்தவர்; நான் காங்கிரஸில் இருந்த போது பெரியார் எதிர்த்த காங்கிரஸில் ஏன் இருக்கிறீர்கள்? என்று யாரும் கேள்வி கேட்கவில்லையே ஏன்? பெரியார் படத்தில் நடிப்பதற்கும் நம்முடைய கொள்கைக்கும் வித்தியாசம் இருக்கிறது தம்பி என்றார் குஷ்பு. தமிழக பாஜகவிலும் தந்தை பெரியாரின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இது அந்த தமிழக பாஜகதானா? என்கிற கேள்வியை இயல்பாகவே எழுப்புகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+