பெரியாரை இழிவுபடுத்தும் சீமானே! 'சீரழிக்கவில்லை' என பிரபாகரன் மீது சத்தியம் செய்வீங்களா? விஜயலட்சுமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தை பெரியார் பெண்ணுரிமைக்காக போராடவில்லை; விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தான் பெண்ணுரிமைக்காக போராடியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருவதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. சீமானின் முதல் மனைவி என தொடர்ந்து உரிமை கோரி வரும் நடிகை விஜயலட்சுமி இன்று வெளியிட்ட வீடியோவில், விஜயலட்சுமியை சீரழிக்கவில்லை என பிரபாகரன் மீது சத்தியம் செய்ய சீமான் தயாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் தந்தை பெரியார் குறித்து தொடர்ந்து அவதூறாக, இழிவாகப் பேசி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவரது இந்தப் பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

periyar seeman vijayalakshmi

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சீமான் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 70 காவல் நிலையங்களில் சீமானுக்கு எதிராக வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.

மேலும் சீமானின் இந்தப் பேச்சால் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளும் அதிருப்தி அடைந்து அக்கட்சியை விட்டே வெளியே வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வந்தால் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என காங்கிரஸ் கட்சியும் அறிவித்துள்ளது.

ஏற்கனவே சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் தந்தை பெரியார் என்ன புரட்சி செய்தார்? பிரபாகரன்தான் பெண்ணுரிமைக்கு பாடுபட்டார் என்றெல்லாம் தொடர்ந்து சீமான் இழிவுபௌத்தி வருகிறார்.

இந்த நிலையில் சீமானின் முதல் மனைவி என உரிமை கோருகிற நடிககை விஜயலட்சுமி இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சீமானை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த வீடியோவில் விஜயலட்சுமி பேசி இருப்பதாவது: சீமான்.. எப்படி எப்படி? பெண்ணுரிமை பேச பெரியாருக்கு எல்லாம் தகுதி கிடையாது.. பிரபாகரனுக்கு மட்டும்தான் அருகதை இருக்கிறதா?

ஓகே சீமான்.. என் கேஸில் வளசரவாக்கம் காவல்நிலையத்துக்கு வரவழைத்த போது, கொல்லையில் இத்தனை பெண்கள் இருக்கும் போது பழகுவதற்கு விஜயலட்சுமிதான் கிடைத்தாரா? என மனைவி கயல்விழி கேட்டதாக அவரை வைத்துக் கொண்டே செய்தியாளர்களிடம் சிரித்தபடியே சொன்னதும் நீங்கதானே சீமான்.. என் வாழ்க்கையை சீரழித்துவிட்டு கேடு கெட்ட இப்படி ஒரு பதிலை சொன்ன சொன்னது உங்க மனைவியா?

சீமான்.. ஏதோ சொடக்கு போட்டீங்களே.. உண்மையான ஆணாக இருந்தால் பிரபாகரன் மீது சத்தியம் செய்து விஜயலட்சுமியின் வாழ்க்கையை சீரழிக்கவே இல்லை என சொல்ல தைரியம் இருக்கிறதா? நான் விஜயலட்சுமியின் கணவர் இல்லை.. மாதம் ரூ50,000 பணம் தருவதாக சொல்லவில்லை என சத்தியம் செய்ய தயாரா? இவ்வாறு நடிகை விஜயலட்சுமி பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+