தமிழகத்தில் இந்த 14 தொகுதிகளில் பாஜக இரட்டை இலக்கத்தில் வாக்கு சதவீதம் பெறும்! தந்தி டிவி பரபர சர்வே
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான புதிய சர்வேயை தந்தி டிவி வெளியிட்டுள்ள நிலையில், இதில் சுமார் 14 தொகுதிகளில் பாஜக இரட்டை இலக்கத்தில் வாக்கு சதவிகிதம் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
விரைவில் நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் அவ்வப்போது லோக்சபா தேர்தல் தொடர்பான சர்வேக்களும் வெளியாகி வருகிறது.

இதற்கிடையே இப்போது தந்தி டிவி தமிழ்நாட்டில் நடக்கும் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்த புதிய சர்வேயை வெளியிட்டுள்ளது. அதில் பாஜகவின் வளர்ச்சி குறித்த சில தகவல்கள் கவனிக்க வைப்பதாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து முயன்று வரும் நிலையில், அதற்கு ஓரளவுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்றே தந்தி டிவி சர்வேயை வைத்துப் பார்க்கும் போது தெரிகிறது. அங்கே சுமார் 14 தொகுதிகளில் பாஜக இரட்டை இலக்கத்தில் வாக்குகளைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இரட்டை இலக்கத்தில் வாக்கு சதவிகிதம்: கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோவை, தென்காசி , பொள்ளாச்சி, சிவகங்கை, பொள்ளாச்சி நெல்லை, திருச்சி, நீலகிரி, விருதுநகர், திருப்பூர், வேலூர், ஸ்ரீபெரும்புதூர், தென்சென்னை ஆகிய தொகுதிகளில் இரட்டை இலக்கத்தில் வாக்குகளைப் பெறும் என்று தந்தி டிவி சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
கோவை, தென் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகள் மட்டுமின்றி ஊரக பகுதிகளிலும் பாஜக பலம் பெற்றுள்ளதையே இது காட்டுகிறது. அதேநேரம் ராமநாதபுரம், தென்காசி, சிவகங்கை, நெல்லை ஆகிய தொகுதிகளில் பாஜக கூட்டணிக்குள் அமமுக வந்தால் வாக்கு வங்கி மேலும் பாஜக வாக்கு வங்கி அதிகரிக்கும் என்பதை நாம் இதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
என்ன காரணம்: எந்த தொகுதிகளில் எல்லாம் பாஜக பிளான் செய்து இறங்கி வேலை செய்தார்களோ.. அந்த தொகுதிகளில் எல்லாம் வாக்கு சதவிகிதம் அதிகமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் டெல்டா, மத்திய தமிழகம், வடதமிழகம் பகுதிகளில் பாஜக இன்னும் வளர வேண்டும்.. அங்கே உள்ளூர் தலைவர்கள் வளர்க்க வேண்டும் என்றே அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வலிமையாக இருக்கும் மேற்கு தொகுதிகளிலும் பாஜகவின் கணிசமாக வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. கோவை உள்ளிட்ட மேற்கு தொகுதிகளில் உள்ளூர் தலைவர்கள் வெற்றியைப் பெற்றுத் தரும் அளவுக்குச் செல்வாக்குடன் இல்லை என்றாலும் முகம் தெரிந்த நபராகவும் கணிசமான அளவுக்கு வாக்கு வங்கியை அதிகரிக்கும் வகையில் உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
என்ன முக்கியம்: ஆக மொத்தம் பார்க்கும் போது இந்த 14 தொகுதிகளில் பாஜக இரட்டை இலக்கத்தில் வெல்லும் என்று தந்தி டிவி சர்வேயில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் கூட்டணியும் வேட்பாளர்கள் யார் என்பதும் முக்கியம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 லோக்சபா தேர்தல்: கடந்த 2019இல் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக- அதிமுக இணைந்து கூட்டணியை அமைத்துத் தேர்தலை எதிர்கொண்டது. இந்த லிஸ்டில் உள்ள தொகுதிகளில் பொள்ளாச்சி, நெல்லை, தென் சென்னை, திருப்பூர் தொகுதிகளில் அதிமுக போட்டியிட்ட நிலையில், விருதுநகர், திருச்சி தொகுதிகளில் தேமுதிகவும் வேலூரில் புதிய நீதிக்கட்சியும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் 2019இல் மற்ற தொகுதிகளில் பாஜக களமிறங்கியது. அதில், கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி தொகுதிகளில் பாஜக இரண்டாவது இடம் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications