கொரோனா விவகாரத்தில் விஷமப் பிரச்சாரம்.. எஸ்டிபிஐ வழக்கு.. 2 வாரத்தில் அறிக்கை கேட்ட உயர்நீதிமன்றம்
சென்னை: கொரோனா விவகாரத்தில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உமர் பாரூக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் கொரோனா பரவல் தொடர்பாக தப்லீக் ஜமாத் மாநாட்டை சுட்டிக்காட்டி சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அந்த மாநாட்டிற்கு பின்பும் பல கூட்டங்கள் மாநாடுகள் நடத்தப்பட்டு உள்ளதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் இந்த விவகாரத்தை ஒரு மத ரீதியாக மாற்றப்பட்டு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிரான பிரச்சாரமாக மேற்கொள்ளப்பட்டுவருவதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் இரு சமூகங்களுக்கு இடையே பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மதப் பிரிவினையை ஒரு சிலர் தூண்டி விடுவதாகவும் கூறியிருந்தார். மேலும், இதுதொடர்பாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நூற்றுக்கணக்கான புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, இது குறித்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இரண்டு வாரத்துக்குள் அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications