Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கம் டூ மகேந்திர சிட்டி.. சென்னையின் அடையாளமே மாறும் நுழைவு வாயில்.. 18.5 கிமீ பாலம் எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் நுழைவு வாயிலான கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் வந்த பிறகு, செங்கல்பட்டு முதல் கிளாம்பாக்கம் வரை வேகமாக வளர்ந்து வருகிறது. வாகன நெரிசல் ஏற்கனவே கண்னை கட்டும் என்கிற நிலையில், கற்பனைக்கு எட்டாத அளவிற்கு இனி இருக்கும் என்பதால், ஜிஎஸ்டி சாலையில் கிளாம்பாக்கத்திலிருந்து மஹிந்திரா சிட்டி வரை 18.4 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. 3500 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த பாலம் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

சென்னையில் நுழைவு வாயிலாக இருந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பின்னர் அடையாளமே மாறிவருகிறது. அருகில் உள்ள கூடுவாஞ்சேரி இன்னொரு திநகராக உருவெடுக்க போகிறது. அண்ணா நகர், குரோம்பேட்டை போல் அதிவேகமாக வளர்ந்து வருகிறது . இதேபோல் ஊரப்பாக்கம், காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், பொத்தேரி, வண்டலூர், மகேந்திரா சிட்டி என செங்கல்பட்டு வரை உள்ள புறநகர் பகுதிகளில் குடியேறுவோரின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது.

chennai kilambakkam gst road

தாம்பரம் பகுதியில் பணியாற்றுவோர், கிண்டியில் பணியாற்றுவோர், ஓஎம்ஆர் பகுதிகளில் பணியாற்றுவோர் பலரும் அங்கு குடியேறி வருவதால் மக்கள் அடர்த்தி சென்னையை போல் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மொத்த சென்னையும் இந்த சாலையில் தான் தமிழ்நாட்டின் பிறபகுதிகளுக்கு போக முடியும் என்பதால், சாலையில வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். இப்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் காரணமாக ஏற்படும் வளர்ச்சியால் நெரிசல் இன்னும் கடுமையாக அதிகரிக்கும் என தெரிகிறது. எதிர்கால சூழலை கருத்தில் கொண்டு, கிளாம்பாக்கம் முதல் காட்டாங்குளத்தூர் வரை மேம்பாலம் அமைக்கப்படும் என்று அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.

இதுதொடர்பாகதமிழக அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிப்பில், "கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று திறந்து வைக்கப்பட்டது. முழு வீச்சில் இயங்கி வரும் நிலையில், நாளொன்றுக்கு சராசரியாக 1,100 அரசுப் பேருந்துகளும், 550 ஆம்னி தனியார் பேருந்துகளும், 600 மாநகரப் பேருந்துகளும் தினசரி இயக்கப்படுகிறது.

chennai kilambakkam gst road

வார நாட்களில் தினசரி சுமார் 50,000 - 60,000 பயணிகளும், வார இறுதி நாட்களில் நாளொன்றுக்கு 70,000 - 80,000 பயணிகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை பயன்படுத்தி வருகின்றனர். பேருந்து முனையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பயணிகளின் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், பல்வேறு கூடுதல் பணிகளும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து ஜி.எஸ்.டி சாலையைக் கடந்து சென்னை மார்க்கமாக செல்லும் மாநகரப் பேருந்துகள் அனைத்தும் தற்போது அயனஞ்சேரி சந்திப்பு வரை சென்று யு (U) வடிவ வளைவில் திரும்பி, சென்னை நோக்கி சென்று வருகின்றன. இதனால் தேவையற்ற கால விரயமும், போக்குவரத்து நெரிசலும் அங்கு ஏற்படுவதை கருத்தில் கொண்டு, இதற்கு நிரந்தரத் தீர்வாக கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு எதிரில் ஜி.எஸ்.டி சாலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மூலமாக வண்டலூர் சந்திப்பு முதல் காட்டாங்கொளத்தூர் வரை முதற்கட்டமாக ஒரு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு, அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) தற்போது விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று கூறப்பட்டிருந்தது.

3500 கோடியில் அமைகிறது: ஆனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கிளாம்பாக்கம் முனையத்திற்கும் மஹிந்திரா சிட்டிக்கும் இடையில் 18.4 கி.மீ நீளத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க முடிவு செய்துள்ளது. 3500 கோடி செலவில் ஆறுவழிச்சாலையாக இந்த மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் எதுவும் கையகப்படுத்தப்படாது என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கிளாம்பாக்கம் மேம்பாலம்: ஏனெனில் ஏற்கனவே இதற்கு தேவையான நிலம் இருப்பதுடன், எதையும் இடிக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது என்கிறார்கள். தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை தான் மேம்பாலம் அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் ஏற்கனவே வண்டலூர், பெருங்களத்தூரில் அடுத்தடுத்து மேம்பாலங்கள் உள்ளன.இப்போது அங்கு பாலம் அமைத்தால் கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படும் என்பதால் கிளாம்பாக்கம் முதல் மகேந்திரா சிட்டி வரை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது..

3 இடத்தில் நுழைவு வாயில்: இந்த உயர்மட்ட மேம்பாலச்சாலையில் ஐயஞ்சேரி சந்திப்பு, காட்டாங்குளத்தூர் மற்றும் சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு (சிபிஆர்ஆர்) கிராசிங் அருகே .. ஆகிய மூன்று இடங்களில் நுழைவு/வெளியேறும் சாய்வுப் பாதைகள் அமைக்கப்படும் என்றும், 18 கிமீ நீள மேம்பாலப் பணிகளை முடிக்க 7 ஆண்டு காலம் ஆகும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள். இந்த புதிய வழித்தடம் கிளாம்பாக்கம் முனையத்திற்கு எதிரே தொடங்கி சென்னையை திருச்சியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் செல்லும் என்றும் கூறினார்கள்.

மேம்பாலத்திற்கு தனிப்பாதை: தற்போதைய நிலையில், கிளாம்பாக்கம் முதல் மகேந்திர சிட்டி வரை உள்ளூர் வாகனங்கள் செல்வதற்கு என்று தனி பாதையோ, நீண்ட தூர வாகனங்களுக்கு என்று தனி பாதைகளோ இல்லாததால், ஜிஎஸ்டி சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.. இதற்கு மேம்பாலம் தீர்வாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பல்வேறு பண்டிகை நாட்களில், அதிக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பி வரும்போது, வாகன நெரிசலை மேம்பாலம் குறைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஆனால் அதற்கு 7 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+