தீப்பிழம்பு போல் மளமளவென பற்றி எரிந்த சென்னை அடையாறு மாநகர ஏசி பஸ்! "இதனால்" வந்த வினையா?
சென்னை: சென்னை அடையாறு பகுதியில் சென்று கொண்டிருந்த மாநகர குளிர்சாதன பேருந்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பேருந்து அண்மையில்தான் சிஎன்ஜி வாகனமாக மறுகட்டமைப்பு செய்யப்பட்டது என்ற தகவல் கிடைத்துள்ளது.
சென்னை பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு 102 என்ற வழித்தட எண் கொண்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட சென்னை மாநகர குளிர்சாதன பேருந்து ஒன்று அடையாறு எல்.பி. சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்தது.

அடையாறு டிப்போ அருகே வந்த போது கியர் பாக்ஸ் பகுதியில் இருந்து புகை வந்ததை நடத்துநரும், ஓட்டுநரும் கவனித்தனர். உடனே பயணிகளை இறங்குமாறு அறிவுறுத்தினர். பயணிகள் இறங்கிய சற்று நேரத்தில் தீ மளமளவென பற்ற ஆரம்பித்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் போல் இருந்தது.
தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பேருந்தில் பற்றிய தீயை அணைக்க போராடினர். ஆனால் அதற்குள் பேருந்து முழுவதும் தீ பற்றி எரிந்தது. எனினும் தண்ணீரை பீய்ச்சி அடித்து பேருந்தில் இருந்த தீ அணைக்கப்பட்டது. உரிய நேரத்தில் பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தீப்பிடித்து பற்றி எரிந்த பேருந்து அண்மையில் சிஎன்ஜியில் இயங்கும் பேருந்தாக மாற்றியமைக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த தீவிபத்து நடக்க காரணம் என்ன என்பது விசாரணையில்தான் தெரியவரும். சிஎன்ஜி வாகனங்கள் என்பது இயற்கையான வாயுக்களை கொண்டு வாகனங்களை இயக்குவது ஆகும். இதனால் காற்று மாசு குறையும். பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளால் காற்றில் மாசு ஏற்படுவதாக சொல்லப்படும் நிலையில் இந்த சிஎன்ஜி யில் மீத்தேன் இருப்பதால் காற்று மாசை தடுக்கும்.

அது போல் கார்பன் வெளியேறுவதும் குறைவாக இருக்கும். வாகனங்களில் உயர் அழுத்தத்தில் சிஎன்ஜி நிரப்பப்படுவதால் எரிபொருள் நிரப்பும் போது பயணிகள் வண்டியில் இருந்து இறங்கிவிட வேண்டும். பெரும்பாலான மாநிலங்களில் இந்த வாயுக்கள் மூலம்தான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து செலவும் குறையும், பராமரிப்பு செலவும் குறையும். பெட்ரோல், டீசல் வாகனத்தை சிஎன்ஜியா மாற்ற சிஎன்ஜி என்ஜின்களும் சிலிண்டர்களும் பொருத்தப்படும்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications