சமூகப் போராளி முகிலன் ஆந்திர போலீஸ் பிடியில்.. ஆவேசமாக முழக்கமிட்ட வீடியோ வெளியானதால் பரபரப்பு
மாயமான சமூக ஆர்வலர் முகிலன் திருப்பதியில் கண்டுபிடிப்பு.. வெளியான பரபரப்பு வீடியோ
Recommended Video
சென்னை: சமூக செயற்பாட்டாளரான போராளி முகிலன் மாயமான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆந்திரா போலீசாரின் பிடியில் முகிலன் சிக்கியிருப்பதாக வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கூடங்குளம் அணு உலைக்கு உட்பட மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து சிறைவாசம் அனுபவித்தவர் முகிலன். ஜல்லிக்கட்டுப் புரட்சியின் போது போலீசாரின் கொடூர அடக்குமுறைக்குள்ளானவர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்திலும் தீவிரமாக பங்கேற்றவர். தூத்துக்குடியில் 13 தமிழர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டங்களில் பங்கேற்றவர்.

அத்துடன் தூத்துக்குடியில் 13 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டது திட்டமிட்ட ஒரு சம்பவம் என்பதை ஆதாரத்துடன் சென்னையில் செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தினார் முகிலன். அந்த செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னர் முகிலன் திடீரென காணாமல் போனார்.

அவரது நிலைமை என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. முகிலன் உயிருடன் இருக்கிறாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து பல கேள்விகள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
#BREAKING கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராளி #முகிலன் உயிருடன் இருப்பதாக வீடியோ
— Oneindia Tamil (@thatsTamil) July 6, 2019
ஆந்திரா காவல்துறையின் பிடியில் போராளி முகிலன் இருப்பதாக வீடியோ வெளியானதால் பரபரப்பு
#mukilan pic.twitter.com/J2NPDMFTEm
இவ்வழக்கு விசாரணையின் போது முகிலன் உயிருடன் இருப்பதாக போலீசார் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இன்று ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அதில் தாடியுடன் காணப்படும் முகிலன் ஆந்திரா போலீசார் பிடியில் இருப்பதாகவும் அவர் கூடங்குளத்தில் அணுகழிவுகளை கொட்டுவதற்கு எதிராக முழக்கங்களை எழுப்புவதாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. முகிலன் ஆந்திரா போலீசாரால் கைது செய்யப்பட்டாரா? அல்லது தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டாரா? என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. அதேநேரத்தில் முகிலன் உயிருடன் இருப்பதாக வெளியாகி உள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications