லேட் பண்ணாதீங்க.. மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெற மீண்டும் வாய்ப்பு.. ஸ்டாலின் அடிக்கும் சிக்ஸர்!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை ஆய்வ செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதற்கு காலக்கெடு எதுவும் இன்றி மேல்முறையீடு விண்ணப்பங்கள் நேரடியாக பரிசீலனை செய்யப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு கடந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது. இந்த திட்டம் கடந்த 10 நாட்களுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஒருவேளை நீங்கள் இந்த முறை விண்ணப்பம் செய்து.. பணம் வரவில்லை என்றால்..எளிதாக நீங்கள் மேல்முறையீடு செய்யலாம். அதன் மூலம் நீங்கள் பணமும் பெற முடியும்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழ்நாட்டில் உள்ள தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்குகிறது. இந்த நொடியில் தமிழ்நாட்டில் இரண்டு கோடி பேர் வரை இந்த திட்டம் மூலம் நேரடியாக நிதி பெறுகிறார்கள். முன்னதாக நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், ஏராளமான பெண்கள் இத்திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்தனர். அங்கு அதிகாரிகள் விண்ணப்பங்களைப் பெற்று தகுதியை சரிபார்த்தனர்.
இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். ஆவணங்கள், வருமான விவரங்கள் மற்றும் குடும்ப நிலையை கவனமாக சரிபார்த்து, தகுதியான பயனாளிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்தனர். இந்த விரிவான சரிபார்ப்புக்குப் பிறகு, புதிதாக தகுதியானோர் பட்டியலை தமிழக அரசு இறுதி செய்தது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, அவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்களுக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன. இச்செய்தி, அவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் 13ம் தேதி முதல் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மகளிர் உரிமை தொகை - மேல்முறையீடு
விண்ணப்பித்த அனைவருக்கும், விண்ணப்பத்தின் நிலை குறித்த குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்பட்டு தற்போது பணம் அனுப்பப்பட்டுவிட்டது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், அதற்கான காரணம் குறுஞ்செய்தியில் தெளிவாகக் குறிப்பிடப்படும். இது, விண்ணப்பதாரர்கள் குறைகளை அறிந்து, மேல்முறையீடு செய்வதற்கு முன் சரிசெய்ய உதவும்.
மேல்முறையீடு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்கள் பகுதி மகளிர் நலத் தனி வட்டாட்சியரை அணுகலாம். குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் மேல்முறையீட்டைச் செய்ய வேண்டும். நிராகரிப்புச் செய்தியுடன் சென்று, அதிகாரியின் அறிவுரைகளைப் பின்பற்றவும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியிருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு மேல்முறையீடு செய்ய தமிழக அரசு வாய்ப்பளித்துள்ளது. தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பம் மறுக்கப்பட்டிருந்தால், அதற்கான முழுமையான நடைமுறையை அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு கடந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது.
எப்படி மேல்முறையீடு செய்வது?
நீங்கள் உங்கள் மேல்முறையீடு மனுக்கள் உங்கள் உள்ளூர் கிராம, நகர் அலுவலர்களிடம் கொடுக்கலாம். அல்லது மகளிர் நலத் தனி வட்டாட்சியரை அணுகலாம். இதன் பின் மேல்முறையீட்டு மனுக்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரின் சீராய்வுக்கு அனுப்பப்படும். அதிகாரிகள் ஆவணங்களை மீண்டும் சரிபார்த்து, விண்ணப்பதாரரின் தகுதியை முடிவு செய்வார்கள். சிறுபிழைகள் அல்லது ஆவண முரண்பாடுகளால் தகுதியான பெண்கள் யாரும் விடுபடாமலிருக்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வசதிக்காக, இ-சேவை மையங்கள் மூலமாகவும் மேல்முறையீடுகளை சமர்ப்பிக்க அரசு வழிவகை செய்துள்ளது. அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல முடியாத பெண்கள், தங்கள் அருகிலுள்ள மையங்கள் வழியாக மேல்முறையீடு செய்யலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழக அரசின் முக்கிய நலத்திட்டம். இந்த மேல்முறையீட்டு அமைப்பு, தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணும் திட்டப் பலனைச் சிரமமின்றி பெறுவதை உறுதி செய்கிறது. விண்ணப்ப நிலை குறித்த முக்கிய குறுஞ்செய்திகளைத் தவறவிடாமல் இருக்க, கைபேசி எண்களை எப்போதும் செயல்பாட்டில் வைத்திருக்க அரசு வலியுறுத்தியுள்ளது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications