தயங்கும் கூட்டணி கட்சிகள்.. திமுகவிடம் பந்து உள்ளது, ஸ்டாலின் நினைத்தால் விஜய்' சிஎம்' ஆக முடியும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் கூட்டணி கட்சிகள் விஜய்யை ஆதரிக்க தயங்கி வருகின்றன. இதனால் தற்போது பந்து முழுமையாக ஸ்டாலின் மற்றும் ஆளுநர் கையில் இருக்கிறது. ஸ்டாலின் தனது கூட்டணிக் கட்சிகளான விசிக, இடதுசாரிகளை இறுகப் பிடித்துக் கொண்டால், விஜய் ஆட்சி அமைப்பது ஏறக்குறைய சாத்தியமற்றதாகிவிடும். அதே சமயம், ஆளுநர் விஜய்யை அழைக்காமல் இழுத்தடித்தால், அதுவும் விஜய்க்கு ஆதரவான அலையையே உருவாக்கும். இப்படியான சூழலே இருக்கிறது.

ஸ்டாலின் ஒரு வார்த்தை கூட்டணி கட்சிகளிடம் விஜய்யை ஆதரியுங்கள் என்று கூறினால் ஆட்டம் மாறும்.. விஜய் இப்போது ஒரு 'தனி மரம்' போல நிற்கிறார். சுற்றி இருக்கும் திமுக, அதிமுக, பாஜக அவருக்குப் பாதை விடுவார்களா அல்லது அவரைப் பொறியில் சிக்க வைப்பார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

The ball is in the DMK s court if MK Stalin wishes Vijay can become the Chief Minister

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 108 இடங்களை வென்றதால் தனிப்பெரும் கட்சியாக நிற்கிறார். அவருக்கு காங்கிரஸ் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவை வழங்கி உள்ளது. இன்னும் 5 முதல் 6 எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டும். அந்த ஆதரவை அவர் அதிமுக கூட்டணியில் இருந்து பெற முயற்சி செய்யவில்லை,, உதாரணமாக பாமகவிற்கு 4 இடங்கள் உள்ளன. அமமுகவிற்கு ஒரு இடம் உள்ளது. இவற்றை கேட்டு பெற விஜய் விரும்பவில்லை.. அதேநேரம் அதிமுகவிடமும், பாஜகவிடமும் விஜய் ஆதரவு கேட்கவில்லை.. அவர் முழுக்க முழுக்க திமுக கூட்டணியை தான் குறிவைத்து செயல்படுகிறார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸை தன் பக்கம் விஜய் கொண்டுவந்துவிட்டார். ஆனா திருமாவளவனின் விசிக இரண்டு இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டு இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் இரண்டு இடங்களையும் வைத்துள்ளது. இவை திமுக கூட்டணியில் வென்ற இடங்கள். இவர்களிடம் தான் விஜய் ஆதரவு கேட்டுள்ளார். இவர்களிடம் ஆறு இடங்கள் உள்ளன.

எனவே இந்த சூழலில் 6 இடங்களை சேர்த்தால் 119 வந்துவிடும். எனவே ஆளுநர் எந்த பிரச்சனையும் செய்யாமல் விஜய் பதவியேற்க ஒப்புக்கொள்வார். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெல்வார். ஆனால் விசிக மற்றும் இடதுசாரிகள் இன்னும் தவெகவை ஆதரிப்பது குறித்து முடிவெடுக்கவில்லை.. இதுபற்றி விவாதிக்க திமுக தலைவர் ஸ்டாலினை போய் சந்தித்து வந்தார்கள்.

இதனிடைய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இரண்டு இடங்கள் வைத்துள்ளது. அந்த இயக்கத்தின் தலைவர் காதர் மொய்தீன், திமுக உடன் இருப்பது கொள்கை கூட்டணி, ஸ்டாலின் சொன்னால் தான் ஆதரவு தருவேன் என்று தவெகவின் அருண்ராஜிடம் கூறியிருக்கிறார். கிட்டத்தட்ட இதேபோன்ற மனநிலையில் தான் இடதுசாரிகள், விசிகவினர் உள்ளனர், எனினும், இவர்களை திமுக தலைவர் ஸ்டாலின், நீங்கள் தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக இருந்தால் உங்கள் விருப்பம் என்று தெளிவாக கூறிவிட்டார். எனினும், அவர் ஆதரவு அளியுங்கள் என்று நேரடியாக அவர்களிடம் கூறவில்லை..

கூட்டணி தர்மம் காரணமாக விசிக மற்றும் இடதுசாரிகள் மற்றும் முஸ்லீம் லீக் போன்றவை தயங்குகின்றன. ஸ்டாலின் முடிவுக்காக காத்திருப்பது போல் தெரிகிறது. இதனால் தற்போது பந்து முழுமையாக ஸ்டாலின் மற்றும் ஆளுநர் கையில் இருக்கிறது. ஸ்டாலின் தனது கூட்டணிக் கட்சிகளான விசிக, இடதுசாரிகளை இறுகப் பிடித்துக் கொண்டால், விஜய் ஆட்சி அமைப்பது ஏறக்குறைய சாத்தியமற்றதாகிவிடும். எனினும் ஸ்டாலின் அப்படி கூறியதாக தெரியவில்லை.. உங்கள் விருப்பம் என்று மட்டும் கூறியிருக்கிறார். ஒருவேளை ஸ்டாலின், பாஜக உள்ளே வரக்கூடாது என்பதற்காக விஜய்யை ஆதரியுங்கள் என்று மறைமுகமாக கூறினால், நாளைக்கே விஜய்' சிஎம்' ஆக முடியும் .

எனினும் விசிக, இடதுசாரிகள் நாளை இந்த விவகாரத்தில் விஜய்க்கு சாதமாக முடிவெடுக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இவர்கள் தான் நேரடியாகவே ஆளுநர் விஜய்க்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். எனவே விஜய்க்கு சாதமாக முடிவெடுக்கவே அதிக வாய்ப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+