விஜயகாந்துக்கு செலுத்தப்பட்ட வீரவணக்கம்.. காரணம் இதுதான்.. யாருக்கெல்லாம் இந்த மரியாதை வழங்கப்படும்?

Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் நேற்று அதிகாலை காலமானார். இன்று அவரது உடல் சந்தன பேழையில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அடக்கம் செய்யும் போது தேமுதிகவினர் வீரவணக்கம் முழக்கமிட்டுள்ளனர். பொதுவாக அஞ்சலி செலுத்தப்படுவதுதான் வழக்கம். ஆனால் இங்கு ஏன் வீரவணக்கம் செலுத்தப்பட்டது? என பலருக்கும் கேள்வி எழுந்திருக்கலாம். இதற்கு பின் வரலாறு இருக்கிறது.

மனிதன் நாகரீகமடைய தொடங்கிய காலங்களில் எல்லோருக்கும் அஞ்சலி மட்டும்தான் செலுத்தப்பட்டு வந்தது. இந்த காலங்களில் மனிதனுடன் சேர்ந்து மதங்களும் வேகமாக வளர்ந்தன. கிறிஸ்தவ மதம் பெரும்பாலான நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது இந்த மதத்தின் முக்கிய நபர்கள் இறந்துபோனபோது அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் அர்த்தம், உயிரிழந்தவர்களின் ஆன்மா நிம்மதியடைய வேண்டும் என்பது தான்.

The body of Vijayakanth buried with Veera Vanakkam! Who will be honored for Veera Vanakkam?

விரிவாக சொல்வதெனில், ஆன்மீக வாதிகள் அனைவரும் ஒளியை ஏந்தி அஞ்சலி செலுத்துவது வழக்கம். அது மெழுகுவர்த்தியாக இருக்கலாம், அல்லது அகல் விளக்காக கூட இருக்கலாம்.

ஆனால் கி.பி 500 முதல் 1500 காலகட்டங்களில் நிலங்களும், செல்வங்களும் ஓரிடத்தில் வழக்கத்திற்கு மாறாக குவிய தொடங்கின. இதற்காக பெரும் போர்கள் கூட நடைபெற்றன. இப்படி குவிக்கப்பட்ட சொத்துக்களை பாதுகாக்க ஆட்கள் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட ஆட்களில் மிகவும் உண்மையாக, கடமையே கண்ணாக இருந்து, சொத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் உயிரை விட்டவர்களுக்கு சாதாரணமாக அஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டது.

இங்கிலாந்து, பிரெஞ்சு (பிரான்ஸ்) நாடுகளில் இந்த முறை மெல்ல உருவானது. பின்னர் காலப்போக்கில் பல்வேறு நாடுகளில் ராணுவ கட்டமைப்பு வலுவடைந்தது. பெரும்பாலான நாடுகள் மேற்குறிப்பிட இரண்டு நாடுகளின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. எனவே இந்த நாடுகளிலும் நாட்டுக்காக உயிரை விட்டவர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. உயிரை விட்டவர் வீர தீர செயல்களுக்கு சொந்தக்காரர் என்பதால் இது வீரவணக்கம் என்று முழங்கப்பட்டது. இதை தேசியவாதம் எனும் கொள்கையை பின்பற்றும் அரசியல் இயக்கங்களும், கட்சிகளும் பின்பற்றின.

இந்தியாவில் ஒருவர் மரணமடைந்தால் அவருக்கு அஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்துவது நடைமுறையில் உள்ளது. அதன்படி காந்தியவாதிகள்தான் அஞ்சலி செலுத்துவார்கள். தலைவர்களின் நினைவு தினத்தன்று அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட சமாதி அல்லது புதைக்கப்பட்ட இடத்தின் முன்பு விளக்கு ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்துவார்கள். இது ஒரு முறையாகும்.

ஆனால் திராவிட இயக்கத்தினர் வீர வணக்கம் செலுத்துவதை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கட்சித் தொண்டர்களும், விஜயகாந்த் உடலை அடக்கம் செய்யும்போது கருப்பு உடையில் வந்து, வலது கையை உயர்த்தி விரல்களை மடக்கி வீர வணக்கம் செலுத்தினர். பின்னர் காவல்துறையினர் சல்யூட் செய்வதை போலவும் வணக்கம் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர செவ்வணக்கம் செலுத்தும் முறையும் நடைமுறையில் இருக்கிறது. பொதுவாக அரசுக்கு எதிராக புரட்சி போராட்டங்களை முன்னெடுத்த, அல்லது அதற்கான தன்னை அர்ப்பணித்தவர்களுக்கு செவ்வணக்கம் செலுத்தப்படுகிறது. கம்யூனிச நாடுகளை தவிர மற்ற நாடுகளில் அரசு தரப்பில் செவ்வணக்கம் செலுத்தப்படாது. செவ்வணக்கத்தை கம்யூனிஸ்ட்டுகள்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். இவர்கள் கைகளை உயர்த்தி 5 விரல்களையும் மடக்கி செவ்வணக்கம் செலுத்துவார்கள். இதன் அர்த்தம் 5 கண்டங்களின் உழைக்கும் மக்களும் ஒன்று என்பது தான்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+