Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீர் பாட்டிலை உடைத்து.. மிக குரூரமாக கொல்லப்பட்ட மதுரை கலைச்செல்வி.. மெரீனா பீச் பயங்கரம்

மெரினா பீச்சில் பெண் கொடூரமாக கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மெரினாவில் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்

    சென்னை: பீச்சில் அடித்து கொல்லப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்பில் பீர் பாட்டிலை உடைத்து குத்தி கொன்று இருப்பதாகவும், விரைவில் கொலையாளியை பிடித்து விடுவோம் எனவும் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    பீச்சின் நீச்சல் குளம் பின்பக்கத்தில் மணலில் பாதி மூடியும் பாதி மூடாமலும் கிடந்தது அந்த 35 வயது நிரம்பிய பெண்ணின் சடலம். அந்த பள்ளத்தை அங்கிருந்த நாய்கள் தோண்டி எடுக்க சண்டை போட்டு கொண்டிருந்தன. இதை பார்த்துதான் வாக்கிங் போனவர்கள் போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.

    பீர் பாட்டில்

    பீர் பாட்டில்

    சடலத்தை வெளியே எடுத்தபிறகுதான் கொலையின் பயங்கரங்கள் ஒவ்வொன்றாக தெரியவந்தது. முதலாவதாக நிர்வாணமாக இருந்த பெண்ணின் மூக்கில் வழிந்து கொண்டே இருந்த ரத்தம், இரண்டாவதாக, முகம், கழுத்தில் பாளம் பாளமாக ஏற்பட்ட படுகாயங்கள். மூன்றாவதாக பெண்ணின் பிறப்புறுப்பில் பீர் பாட்டிலை உடைத்து செருகி கொன்றிருந்தது தெரியவந்தது. நான்காவதாக பெண்ணின் மார்பகத்தில் அளவுக்கு அதிகமான காயங்கள் ஏற்பட்டு இருந்தன.

    நேரில் விசாரணை

    நேரில் விசாரணை

    சடலத்தின் அருகில் ஆண்களின் செருப்புகள், மதுபானங்கள், பெண்ணின் செல்போன் சிதறி கிடந்தன. உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபின்புதான் விசாரணை ஆரம்பமானது. இது சம்பந்தமாக இணை ஆணையர் அன்பு, துணை ஆணையர் செல்வநாகரத்தினம், மற்றும் உதவி ஆணையர் வெற்றிசெழியன் ஆகியோர் நேரில் சென்று விசாரணையை துவக்கினர்.

    பாலியல் தொழில்

    பாலியல் தொழில்

    செல்போனை கொண்டு அந்த பெண், மதுரையை சேர்ந்த கலைச்செல்வி என்பதும், பாலியல் தொழில் செய்பவர் என்பதும் தெரியவந்தது. அதேபோல செல்போனில் அவர் கடைசியாக பேசிய 2 நம்பர்களை போலீசார் தொடர்பு கொண்டு பேசியபோது, கொலை செய்யப்பட்ட பெண் யார் என்றே தங்களுக்கு தெரியாது என்று சொல்லிவிட்டனர். மீதமுள்ள நம்பர்களை கொண்டு விசாரித்தபோது ஆட்டோ டிரைவர்கள் பிரேம்குமார், சூர்யா உட்பட 3 பேரிடம் கலைச்செல்வி அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார் என்பது தெரியவந்தது.

    விரைவில் பிடிபடுவார்கள்

    விரைவில் பிடிபடுவார்கள்

    அதனால் அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் துருவி துருவி விசாரித்து வருகிறார்கள். கொலையுண்ட இடத்தில் சிசிடிவி காமராவும் இல்லை என கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் செக்ஸ் தகராறில்தான் கொலை நடந்திருக்கிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் கூடிய சீக்கிரம் கொலையாளிகளை பிடித்துவிடுவோம் என்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+