61 உயிர்களை பலி கொண்ட முகலிவாக்கம் கட்டிட விபத்து.. முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை!
சென்னை: கடந்த 2014ம் ஆண்டு முகலிவாக்கத்தில் நடந்த கட்டிட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தற்போதைய முதல்வர் ஸ்டாலின், 2014 ம் ஆண்டு தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில், நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் சென்னை முன்னணியில் இருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் சென்னை நோக்கி வருகின்றனர். இதில் சில நூறு பேர் சென்னையை தற்காலிக வாழ்விடமாக தகவமைத்துக்கொள்கின்றனர். இப்படி சென்னை நோக்கி நகரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் இதற்கேற்ப சென்னையின் உள்கட்டமைப்புகள் வேகமாக, போதுமான அளவு வளர்கிறதா? என்று கேட்டால் அது கேள்விக்குறிதான்.

நெரிசலான சாலைகள், ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகள், கட்டுப்பாடுகளை மீறி வளர்ந்து நிற்கும் கட்டுமானங்கள். பெரும் முதலையாக வளர்ந்திருக்கும் ரியல் எஸ்டேட் துறை என சென்னை மூச்சு முட்டி நிற்கிறது. இப்படி இருக்கையில்தான் சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கம் என்னுமிடத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம், 2014 ம் ஆண்டு ஜூன் மாதம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 61 பேர் பலியாகினர், 27 பேர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்த மற்றொரு 11 மாடி கட்டிடம், 2014 நவம்பர் மாதம் இடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அப்போது முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். அத்துடன், நீதிபதி ரகுபதி தலைமையில் ஒருநபர் ஆணையத்தையும் அமைத்து உத்தரவிட்டிருந்தார். சிறப்பு புலனாய்வு குழு விசாரணை திருப்தியளிக்கும் வகையில் இல்லை எனக் கூறி, இந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அப்போது திமுக பொருளாளராக இருந்த, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில், உண்மை குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஒரு நபர் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ததாகவும், அதன் பரிந்துரை அடிப்படையில், காப்பீட்டை கட்டாயமாக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடைசியாக, கடந்த 2017 ம் ஆண்டு விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, ஏழு ஆண்டுகளுக்குப் பின், சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வில் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
-
திருமணமான ஆண், வேறு பெண்ணுடன் 'லிவ்-இன்'உறவில் இருந்தால் குற்றம் அல்ல.. ஐகோர்ட் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications