அண்ணாமலை முகத்தில் விழுந்த செல்போன்.. பூக்களோடு வீசப்பட்டதும் அவர் கொடுத்த ரியாக்ஷன்
மதுரை: சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் வேட்பாளர் திருமாறனை ஆதரித்து பாஜக முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் 11 நாட்களை உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் வேட்பாளர் திருமாறனை ஆதரித்து பாஜக முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொள்ள பேருந்து நிலையம் முன்பு வருகை தந்தார்.

அப்போது கட்சி நிர்வாகிகள் அண்ணாமலைக்கும், வேட்பாளர் திருமாறனுக்கும் மலர் மாலைகளைகளையும், பூக்களையும் தூவினர். அப்போது திடீரென பூக்களுடன் செல்போன் ஒன்று பறந்தது வந்தது.அந்த செல்போன் அண்ணாமலையின் முகத்தில் பட்டு பிரச்சார வாகனத்தின் முன் விழுந்தது. முகத்தில் செல்போன் பட்ட அடுத்த கணம் திடிக்கிட்ட அண்ணாமலை சிரித்த முகத்துடன் செல்போனை தேடி எடுத்து வீசிய நபரிடம் ஒப்படைத்தார்.
செல்போன் அண்ணாமலை முகத்தில் பட்டதால் வேட்பாளர் திருமாறன் முகம் சட்டென மாறியது.உடனே அண்ணாமலை வேட்பாளரின் முதுகில் தட்டிக் கொடுத்து செல்போனை தூக்கி எறிந்த நபர் முன் அண்ணாமலை ஓகே என தம்ஸ் அப் காட்டினார்.இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசனை ஆதரித்து நேற்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது நல்லாம்பாளையம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து அவர் ஓட்டு சேகரித்தார். அப்பகுதியில் உள்ள சிப்ஸ் கடை ஒன்றில் அண்ணாமலை வாக்கு சேகரித்தார். அப்போது கடையில் இருந்த இயந்திரத்தை பயன்படுத்தி முறுக்கு பிழிந்தார். அவர் முறுக்கு சுட்டு ஓட்டு சேகரித்ததை பலரும் பாராட்டினார்கள்.
அண்ணாமலை நாளை தனது பிரச்சாரம் தொடர்பாக வெளியிட்ட பதிவில், "நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், ராசிபுரம், சேலம் வடக்கு மற்றும் தெற்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, நாளைய தினம் (13.04.2026), பொதுமக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.
திமுக ஆட்சியின் பொய்கள், ஊழல், சட்டம் ஒழுங்கு மற்றும் மக்கள் நலனில் தோல்வி உள்ளிட்ட தமிழகத்தின் அவலநிலைக்கு முடிவு கட்டும் நேரம் இது. பொதுமக்கள் அனைவரும், பெருந்திரளெனக் கூடி, ஆதரவளிக்க வேண்டுமென்று, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?










Click it and Unblock the Notifications