சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

40 வீரர்களின் உயிர் தியாகத்தை நாடு மறக்காது... சென்னையில் புல்வாமா தாக்குதலை நினைவு கூர்ந்த மோடி!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இன்று நடந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி புல்வாமா தாக்குதல் குறித்து நினைவு கூர்ந்தார். புல்வாமா தாக்குதலில் இழந்த அனைத்து தியாகிகளுக்கும் மரியாதை செலுத்துவோம் என்று அவர் கூறினார்.

கடந்த 2019-மல் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதல்40 பாதுகாப்புப் படையினர் வீர மரணம் அடைந்தனர். இந்த புல்வாமா தாக்குதல் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

The country will not forget the sacrifice of 40 soldiers Modi remembers the Pulwama attack in Chennai

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி இதே நாளில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனங்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. ஸ்ரீநகர்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினர் வீர மரணம் அடைந்னர். தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஒருவனும் உயிரிழந்தனர். இந்த மோசமான புல்வாமா தாக்குதல் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

The country will not forget the sacrifice of 40 soldiers Modi remembers the Pulwama attack in Chennai

சென்னையில் இன்று நடந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி புல்வாமா தாக்குதல் குறித்து நினைவு கூர்ந்தார். இது தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, 'எந்த ஒரு இந்தியனும் இந்த நாளை மறக்க முடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் புல்வாமா தாக்குதல் நடந்தது. அந்த தாக்குதலில் இழந்த அனைத்து தியாகிகளுக்கும் மரியாதை செலுத்துவோம். பாதுகாப்புப் படைகள் குறித்து பெருமைப்படுவோம். அவர்களின் துணிச்சல் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று கூறினார்.

English summary
Speaking at a function in Chennai today, Prime Minister Modi recalled the Pulwama attack. He said he would pay tribute to all the martyrs who lost their lives in the Pulwama attack
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X