’முத்ரா’ மூலம் நாடு முன்னேறாது? நிர்மலா Vs ஜெயரஞ்சன்! இந்தியாவில் நிலவும் Jobless Growth
சென்னை: முத்ரா திட்டத்தின் மூலம் இந்தியாவை முன்னேற்ற முடியாது என்றும் இந்தியாவில் Jobless Growth என்பது எந்தளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதைப் பற்றியும் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 6 நாட்கள் முன்னதாக கோவைக்கு வந்த மத்திய நிதியமைச்சர் தொழில்முனைவோர் குறைகளைக் கேட்பதற்கான கூட்டத்தில் பங்கேற்றார். அதில் கலந்து கொண்ட அன்னபூர்ணா உணவக உரிமையாளர் இனிப்பு, காரம் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. இதனால் கணக்கு வைப்பது கஷ்டமாக உள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் இனிப்பு, காரம் என உண்கிறார்கள். ஒரே பில்லில் தனித்தனி ஜிஎஸ்டி போடும் முறையால் கம்ப்யூட்டரே திணறுகிறது. ஆகவே அதை ஒரே மாதிரியாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒட்டு மொத்த ஜிஎஸ்டி முறையும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக நிதியமைச்சரைச் சந்தித்து உணவக உரிமையாளர் மன்னிப்புக் கேட்கும் வீடியோ வெளியானது. அது மேலும் சர்ச்சையானது. அதனை அடுத்து அன்னபூர்ணா முதலாளி இதை மேலும் பெரிதுபடுத்த வேண்டாம் என ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் அமைதியானது.
இப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதே கூட்டத்தில் அளித்த முத்ரா கடன் சம்பந்தமான புள்ளிவிவரம் தவறானது என்ற சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது நிதியமைச்சர் இந்தியா முழுக்க 49.5 கோடிக் கணக்குகள் இவர்களுக்கு 29.76 லட்சம் கோடி கடன் கொடுத்துள்ளோம் என்று சொல்லி இருந்தார். தமிழ்நாட்டில் மொத்தம் முத்ரா கடன் கணக்குகள் 5.6 கோடி என்றும் இதற்காக 3 லட்சம் கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அதேபோன்று கோவையில் மட்டும் 20 லட்சம் முத்ரா கணக்குகள் உள்ளன என்றும் இதற்காக 13 ஆயிரத்து 180 கோடி ரூபாய்க் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
கோவை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையே 34 லட்சம் பேர்தான். இதில் 20 லட்சம் பேர் எப்படி முத்ரா கடன் பெற முடியும் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு நிர்மலா சீதாராமன் இது வங்கி மூலம் கிடைக்கப்பெற்ற புள்ளிவிவரம்தான். வேண்டுமானால் நான் மறுமுறை சரி பார்த்து வேண்டுமானால் விளக்கம் அளிக்கிறேன்.
இவர் அளித்த புள்ளிவிவரம் தவறு என்று பலரும் விவாதித்து வருகின்றனர். இதுவரை நிதியமைச்சர் இதற்கு விளக்கமும் அளிக்கவில்லை. இந்தச் சர்ச்சை தொடர்பாக தமிழக திட்டக்குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் சில விளக்கங்களை அளித்துள்ளார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "முத்ரா கடன் சிறு தொழில்கள் செய்வோருக்காகச் செயல்பட்டு வரும் திட்டம். இதில் மூன்றுவிதமான அளவுகளில் கடன் கொடுக்கிறது மத்திய அரசு. அதாவது 40 ஆயிரம் என்பது குறைவாகக் கடன், அதற்கு மேலான கடன். பிறகு கோடிகளில் கடன்.
இதில் இதுவரை வழங்கப்பட்டுள்ள கடன் என்பது குறைந்த தொகையிலான கடன்களையே மத்திய அரசு அதிகம் வழங்கி இருக்கிறது. இதில் கடன்பெற்றவர்கள் ஏற்கெனவே நடைபெற்றுவரும் தொழிலை மேம்படுத்தவே இந்தக் கடன் பயணிக்கிறது. புதியதாகத் தொழிலைத் தொடங்க இந்த நிதி போதுமானதாக இல்லை என்று ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள்.
இதற்கு முன்னால் முத்ரா கடன் என்பது தொழில் செய்வதற்கு போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுதான் பரவலாக இருந்தது. வெறும் 40 ஆயிரத்திற்குள் வழங்கப்படும் கடனை வைத்து என்ன தொழில் தொடங்கிவிட முடியும்? பல ஆண்டுகளாகவே இந்தியாவில் வளர்ச்சி இருக்கிறது. ஆனால் வளர்ச்சிக்கு ஏற்ப வேலை வாய்ப்பு இல்லை. அதைச் சரிக்கட்டத்தான் பாஜக அரசு எதற்கு வேலை தேட வேண்டும். நாமே வேலையை உருவாக்குவோம் என்று சொல்லி முத்ரா கடன் தரத் தொடங்கியது. அப்போதுதான் 'பகோடா போடுவது கூட தொழில்தான்' என்று மோடி பேசியது சர்ச்சையானது.
இதன் உள்ளார்ந்த பொருள் என்னவென்றால், நீயே ஒரு தொழிலை தேடிக் கொள். அரசு வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று நம்பாதே என்பதுதான். அப்படி என்றால் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று மோடி ஏன் உத்தரவாதம் தரவேண்டும்? மோடி சொல்வதைப் போல நாட்டில் உள்ளவர்கள் எல்லாம் வடை சுட்டால் அதை யார் வாங்கி சாப்பிடுவது?
இந்தியா இதுவரை குறைந்த வருமானம் கிடைக்கும் நாடாகவே உள்ளது. அது மத்திய நிலைக்கு உயர்ந்து பின், அதிக சம்பளம் பெறும் நபர்கள் வாழும் நாடாக வளர வேண்டும். அதற்கு அதிக சம்பளம் தரும் நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும். அது இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை. அதைச் செய்ய வேண்டியது மத்திய அரசு. ஆனால், வெறும் பகோடா கடை போடச் சொன்னால் நாட்டின் பொருளாதாரம் உயராது?
உதாரணமாகத் தமிழ்நாட்டில் இப்போது தோல் இல்லாமல் ஷூ தயாரிக்கும் கம்பெனியை கொண்டு வருகிறோம். அதன்மூலம் விவசாயத்தில் உள்ள மக்களை இந்தத் தொழிற்சாலையின் ஊழியர்களாக முன்னேற்ற முடியும். இதன் மூலம் மாதம் 20 ஆயிரம் நிரந்தர சம்பளம் கிடைக்கும். மாநில வளர்ச்சிக்கு இது மட்டுமே போதாது.

அடுத்த கட்டமாக சாஃப்ட்வேர் படித்த இளைஞர்களுக்காக வேலை வாய்ப்பை தரக்கூடிய நிறுவனத்தை உண்டாக்க வேண்டும். அதற்கு மேல் அதிக சம்பளம் தரக்கூடிய ஏஐ தொழில்நுட்பம் கொண்ட கம்பெனிகளை கொண்டுவர வேண்டும். இதன் மூதல் அதிகபட்ச வருமானம் பெரும் தலைமுறை உண்டாகும். இது தமிழ்நாட்டுக்கு ஏற்ற ஒரு மாதிரி திட்டம். இதையே இந்தியா முழுமைக்கும் செயல்படுத்த முடியாது.
ஏனென்றால், பல மாநிலங்களின் வளர்ச்சி சீராக ஒரே நிலையில் இல்லை. கல்வியும் ஒரே மாதிரி இல்லை. தமிழ்நாட்டுக்குப் பொருந்தக் கூடிய ஒரு திட்டம் பீகாருக்குப் பொருந்தாது. மேற்கு வங்கத்திற்குப் பொருந்தும் திட்டம் மகாராஷ்டிராவுக்குப் பொருந்தாது. எல்லாம் வேறு வேறு அளவீடுகள். அதைப் பற்றி மோடி அரசுக்கு ஏதாவது அக்கறை உள்ளதா எனத் தெரியவில்லை? அவர் வடை சுடுவதைப் பற்றிப் பேசுகிறார். இந்த மாதிரி வடை சுடும் தொழிலில் ஈடுபட்டால், ஒரு குடும்பம் 3 தலைமுறைக்கு அதற்கு உள்ளாகவே சிக்கிக் கொள்ளும். மீள முடியாது. அதை உணராமல் மோடி பேசுகிறார்" என்று கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications