18,000-ஐ நெருங்கும் பாதிப்பு.. தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா.. ஆக்டிவ் கேஸ்கள் உச்சம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 17,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து நாளுக்கு நாள் இரு மடங்காக அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் தற்போது கொரோனா தினசரி பாதிப்பு 18,000-ஐ நெருங்கியுள்ளது. சென்னையில் கொரோனா பரவல் வேகம் தொடர்ந்து இரட்டிப்பாகி வருகிறது. இங்கு மட்டும் 7372 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா ஆதிக்கம்
ஓமிக்ரான் வைரஸ் புகுந்த நேரத்தில் இருந்து தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 28,47,589 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குணமடைந்தவர்கள் எத்தனை?
சென்னையில் அதிகபட்சமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலும், உயிரிழப்பிலும் சென்னையே முதலிடத்தில் உள்ளது. காஞ்சிபுரத்தில் 2 பேர் இறந்தனர். வேலூரியில் ஒருவரும், திருபத்தூரில் ஒருவரும் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 36,905 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 4,039 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 27,21,725 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் மிக மிக குறைவாக இருக்கிறது.

சென்னை பாதிப்பு அதிவேகம்
88,959 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 1,54,935 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,80,09,172 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 7372 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாபாதிப்பு தினமும் அதிவேகமாக இரட்டிப்பாகி வருகிறது.

இந்த மாவட்டங்களில் மிக அதிக பாதிப்பு
செங்கல்பட்டில் 1840 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 981 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 620 பேருக்கும், மதுரையில் 498 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 388 பேருக்கும், திருவள்ளூரில் 931 பேருக்கும், திருச்சியில் 444 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 205 பேருக்கும், ஈரோட்டில் 330 பேருக்கும், சேலத்தில் 285 பேருக்கும், நாமக்கல்லில் 168 பேருக்கும், தஞ்சாவூரில் 96 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வேலூரில் 292 பேருக்கும், தூத்துக்குடியில் 289 பேருக்கும், விருதுநகரில் 311 பேருக்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications