Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஸ்வரூபமான போராட்டம்! தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? விநியோகஸ்தர் கூறிய முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது. இதனால் அங்கு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் எழுந்திருக்கிறது. இந்த போராட்டங்கள் தமிழ்நாட்டிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இங்கு எரிபொருள் தட்டுப்பாடு வராது என தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத் தொடர் பெரும் சலசலப்புகளுடன் முடிந்தது. எதிர்க்கட்சி எம்பிக்களின் சஸ்பெண்ட் ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம், இந்திய தண்டனைச் சட்டம் திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் கடும் எதிர்ப்பு மத்தியில் நிறைவேற்றப்பட்டன. அதாவது, இந்திய தண்டனை சட்டம் என்பது ஆங்கிலேயர் கால சட்டம் என்று கூறி இதனை மாற்ற மசோதா ஒன்றை மத்திய அரசு முன்மொழிந்தது. இது வாக்கெடுப்புக்கு பின்னர் நிறைவேற்றப்பட்டது.

The distributors association explained that the fuel ban will not happen in Tamil Nadu due to the protest of the truck drivers

இதன்படி, இந்திய தண்டனை சட்டம் என்பது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் 'பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா' எனவும், இந்திய சாட்சிய சட்டம் 'பாரதிய சாக்சியா' எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை. ஆனால், இதில் சில திருத்தங்களையும் அரசு மேற்கொண்டது. அதன்படி, கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் 5 ஆண்டுகள் சிறை, ஹிட் அண்ட் ரன் என்று சொல்லப்படும், சாலை விபத்துகளுக்கு அதிகபட்சமாக ரூ.7 லட்சம் அபராதத்துடன் கூடிய 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சட்டம் திருத்தப்பட்டது.

இதுதான் தற்போது பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. ஏனெனில் இதற்கு முன்னர் இந்த வழக்கில் சிக்கினால் 2 வருட சிறை தண்டனைதான் இருந்தது. எனவே இந்த சட்ட திருத்தங்களை எதிர்த்து, மத்திய பிரதேசம் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த லாரி ஓட்டுநர் சங்கத்தினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் வட மாநிலங்களில் பெட்ரோல், டீசல், எல்பிஜி கேஸ் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தால் முக்கிய சாலைகள் முடங்கியுள்ளன. போராடும் லாரி டிரைவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்திய நிலையில், டிரைவர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம், மக்கள் பெட்ரோல் பங்குகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். வாகனங்கள் தவிர கேன்களிலும், பெட்ரோல், டீசல்களை நிரப்பி செல்கின்றனர். தெலங்கானா வரை எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் பரவியிருக்கிறது.

இந்த போராட்டங்களால் தமிழ்நாட்டிலும் சலசலப்பு எழுந்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக இந்த சங்கத்தின் தலைவர் முரளி கூறியதாவது, "புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக லாரி ஓட்டுநர்களின் போராட்டம் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில்தான் வலுவடைந்துள்ளது. சென்னையில் இருந்தே பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுவதால் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வராது" என்று கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+