சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டி.வி.க்களில் வெற்றி நடைபோடும் அதிமுக, திமுக விளம்பரங்கள்.. வெற்றி வாக்குகளை அறுவடை செய்யுமா?

Google Oneindia Tamil News

சென்னை: திமுக, அதிமுக கட்சிகள் செய்தித்தாள்கள், டி.வி.க்கள், சமூக வலைத்தளங்களில் போட்டி போட்டு விளம்பரம் செய்து வருகின்றன.

எங்க ஒட்டு இரட்டை இலைக்குத்தான்'' என்று அதிமுகவின் திட்டங்களை எடுத்து சொல்வது போல் ஒரு சில விளம்பரங்கள் அமைந்துள்ளன.

 கீழே விழுந்த சிறுவன்.. கடித்துக் குதறிய தெரு நாய்கள்.. உஷாரா இருங்க கீழே விழுந்த சிறுவன்.. கடித்துக் குதறிய தெரு நாய்கள்.. உஷாரா இருங்க

இளைஞர்கள், இளம்பெண்களை மையப்படுத்துவதுபோல் திமுக விளம்பரங்கள் உள்ளன.

வெற்றி நடைபோடும் விளம்பரம்

வெற்றி நடைபோடும் விளம்பரம்

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் தமிழகம் முழுவதும் போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆளுங்கட்சியினர் செய்த திட்டங்களை முன்வைத்தும், எதிர்க்கட்சியினர் செய்ய போகும் திட்டங்கள், ஆட்சியில் செய்த தவறுகளை சுட்டிக்காட்டியும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. இது ஒருபுறமிருக்க திமுக, அதிமுக கட்சிகள் செய்தித்தாள்கள், டி.வி.க்கள், சமூக வலைத்தளங்களில் போட்டி போட்டு விளம்பரம் செய்து வருகின்றன.

 டி.வி.க்களில் வலம் வருகின்றன

டி.வி.க்களில் வலம் வருகின்றன

ஏற்கனவே அதிமுகவின் ''வெற்றி நடை போடும் தமிழகமே'' என்ற பிரசார பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். இதேபோல் திமுகவின் ''ஸ்டாலின்தான் வாராரு; விடியல் தரப் போறாரு'' என்ற பிரசார பாடலை திமுகவினர் மட்டுமில்லாது, சாதராண மக்களும் பார்த்து ரசிப்பதை காண முடிகிறது. தற்போது இந்த இரு கட்சிகளின் தேர்தல் விளம்பரங்கள்தான் அனைத்து டி.வி.க்கள், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் வெற்றி நடை போட்டு வருகிறது.

அதிமுக சாதனையை கூறும் விளம்பரம்

அதிமுக சாதனையை கூறும் விளம்பரம்

முதலில் அதிமுகவின் விளம்பரத்தை பற்றி பார்ப்போம். எதிர்க்கட்சியினர் ஒரு சிலர் காய்கறி கடைகளில், வயல்வெளிகளில் இருக்கும் பெண்களிடம் ஒட்டு கேட்கின்றனர். அதற்கு அங்கு இருப்பவர்கள், ''இந்த ஆட்சியே நல்லாத்தானே போயிட்டு இருக்கு, எங்க ஒட்டு இரட்டை இலைக்குத்தான்'' என்று அதிமுகவின் திட்டங்களை எடுத்து சொல்வது போல் ஒரு சில விளம்பரங்கள் அமைந்துள்ளன. இதேபோல் அதிமுகவின் வேறு ஒரு விளம்பரம் நன்கு பிரபலமாகி உள்ளது.

வைரலானது

வைரலானது

அதாவது வீட்டில் இருந்து ஆன்லைன் வழியாக படிக்கும் பள்ளி சிறுவன் ஒருவன், கணக்கு பாடத்துக்கு பயந்து, எப்படியாவது கரண்ட் போய்விட வேண்டும் என்று இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம்கள் என அனைத்து கடவுள்களையும் கும்பிடுகிறான். ஆனால் அவன் எதிர்பார்த்தப்படி கரண்ட் போகவில்லை. அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் கரண்ட் இருந்தது என்று சொல்லும் வகையில் அமைந்திருந்த இந்த விளம்பரம் ரசிக்கும்படி இருந்தது.

 இளம்பெண்கள் கவரும் திமுக விளம்பரங்கள்

இளம்பெண்கள் கவரும் திமுக விளம்பரங்கள்

ஆளுங்கட்சியின் விளம்பரம் இப்படியென்றால் எதிர்க்கட்சியின் விளம்பரம் வேறு விதமாக உள்ளது. அதாவது ஆளுங்கட்சி கொண்டு வந்த மக்கள் விரோத திட்டங்கள், புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, மொழித் திணிப்பு, மதவாதம் ஆகியவை குறித்து மக்களிடம் எடுத்த்துக் கூறி ''திமுக ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் சரி செய்யப்படும்'' என்பதுபோல் இந்த விளம்பரங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக இளைஞர்கள், இளம்பெண்களை மையப்படுத்துவதுபோல் இந்த விளம்பரங்கள் நன்றாக உள்ளன.

டார்ச் லைட் அடிக்கும் கமல்

டார்ச் லைட் அடிக்கும் கமல்

இது தவிர கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் விளம்பரமும் பார்ப்பதற்கு நல்லாவே இருக்கிறது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், திமுக, அதிமுகவை குறைசொல்லி பேசுகிறார். அப்போது திடீரென கரெண்ட் போகும்போது, இதன் மூலம்தான் உங்களுக்கு விடியல் கிடைக்கும் என்று தான் கையில் வைத்திருக்கும் கட்சியின் சின்னமான டார்ச் லைட் ஒளியை பாய்ச்சி பேசுகிறார் கமல். அவரது பின்னணியில் ஏராளமானோர் டார்ச்சை லைட் வைத்து ஒளி பரப்புவதுபோல் இந்த விளம்பரம் உள்ளது.

வெற்றி வாகை சூட உதவுமா?

வெற்றி வாகை சூட உதவுமா?

இவ்வாறு காணும் டிவிக்களில் எல்லாம் இந்த விளம்பரங்கள் சுற்றி, சுற்றி வருகின்றன. தலைவர்களின் பிரசாரம் ஒரு பக்கம் இருந்தாலும், வீடுகளில் மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் இந்த விளம்பரங்கள் கட்சிக்கு வாக்குகளை அறுவடை செய்வதில் பெரும் பங்கு வகிக்கும். விளம்பரங்கள் வாக்குகளை அறுவடை செய்யுமா? வெற்றி நடை போடும் இந்த விளம்பரங்கள் தேர்தலில் வெற்றி வாகை சூட உதவி புரியுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
The DMK and AIADMK have been competing and advertising in newspapers, TV and social media
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X