அ.தி.மு.க பிரமுகர் பேக்கரியை அடித்து நொறுக்கிய விவகாரம்.. தி.மு.க பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்
சென்னை: மதுரை அருகே அதிமுக பிரமுகர் பேக்கரியை அடித்து நொறுக்கிய சம்பவத்தில் தொடர்புடைய திமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அ.தி.மு.க பிரமுகர் அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான பேக்கரி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு கொரோனா முழு ஊரடங்கால் இந்த பேக்கரி அடைக்கப்பட்டிருந்தது.

பேக்கரி அடித்து நொறுக்கப்பட்டது
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் அந்த பேக்கரி வாசலில் நுழைந்தனர். அவர்கள் பேக்கரி முன் போடப்பட்டிருந்த கண்ணாடி பெட்டிகளை சரமாரியாக அடித்து நொறுக்கினார்கள். மேஜை, நாற்காலியை சேதப்படுத்தி ஆவேசமாக தூக்கி வீசினார்கள். மேலும், அந்த வளாகத்தில் இருந்த அரசு வங்கி ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினார்கள்.

போலீசார் விசாரணை
பின்னர் அந்த மர்ம நபர்கள் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு இருந்த சிசிடிவியில் பதிவாகி வீடியோ வைரலாக பரவியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீசார் அங்கு விசாரணை நடத்தினார்கள். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினார்கள்.

4 பேர் கைது
அப்போது இந்த அராஜகத்தில் ஈடுபட்ட 4 பேரும் அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் அசோக், அவரது ஆதரவாளர்கள் என தெரியவந்தது. இது தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில் நெல் கொள்முதல் நிலையத்தில் மரியாதை கொடுப்பதில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட விரோதம் காரணமாக அசோக் பேக்கரியை அடித்து நொறுக்கியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அசோக் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திமுக பிரமுகர் நீக்கம்
திமுக வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பிரகாசத்தின் தூண்டுதலின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அவர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுளளார். இது தொடர்பாக அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் "மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பி.பிரகாசம், கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் " என கூறியுள்ளார்.
-
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே!












Click it and Unblock the Notifications