என்னத்த சொல்ல.. நாம தான் குடம் குடமா தூக்கிட்டு தண்ணிக்கு அலையறோம் என்றால்.. நாயும் அலையுது!
நாய் ஒன்று குடத்துடன் தண்ணீர் தேடி அலைகிறது
சென்னை: என்னத்த சொல்றது... நாம தான் குடம் குடமா தூக்கிட்டு தண்ணிக்கு அலையறோம் என்றால், நாய்கூட நாயா அலையுது.. தண்ணீர் பஞ்சம் இந்த நாயை கூட விட்டு வைக்கவில்லை!
போன வருஷம் தமிழகத்தில் அவ்வளவா மழை இல்லை.. அதிலும் சென்னை சுத்தம்.. எப்படியோ குடிநீர் பஞ்சம் வரப்போகிறது, வறட்சி வாட்ட போகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தார்கள். இருந்தாலும் என்ன பிரயோஜனம்?
சென்னைவாசிகள் உள்ளிட்ட தமிழக மக்கள் தண்ணி இல்லாமல் தவித்து வருகிறார்கள். தெருத்தெருவாக குடத்தை தூக்கி கொண்டு அலைகிறார்கள். ஒரு குடம் தண்ணியை விலைகொடுத்து வாங்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. அதனால் ஆங்காங்கே குடிநீர் கோரி மறியல், போராட்டம் என வெடித்து கிளம்பி வருகிறது.

மதுரை
இப்போது ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் மதுரை மேலூரில் நடந்துள்ளது போல தெரிகிறது. அது ஒரு தெரு.. திடீரென்று ஏதோ சந்தில் இருந்து ஒரு நாய் வேகமாக ஓடிவருகிறது. அந்த நாய்க்கு தலையே இல்லை.. ஏன்னா.. தலைதான் குடத்துக்குள்ள மாட்டிக்கிட்டு இருக்கே!

பிளாஸ்டிக் குடம்
அந்த நாய்க்கு தண்ணீர் தாகம் எடுத்திருக்கு. அங்கு ஒருபிளாஸ்டிக் குடம் கண்ணில் பட்டிருக்கு. ஆசை ஆசையாக ஓடிப்போய் பிளாஸ்டிக் குடத்துக்குள் தலையை விட்டு பார்த்தால், தண்ணியை காணோம். ஆனால், குடத்துக்குள்ளிருந்து தலையை அந்த நாயால் அதனால் வெளியே எடுக்கவே முடியவில்லை. அங்கும், இங்கும் ஓடுகிறது. கண்ணு தெரிந்து ஓடுகிறதா, தெரியாமல் ஓடுகிறதா என தெரியவில்லை.

விடுவிப்பு
இதை அங்கிருந்த சிலர் பார்த்ததும் குடத்தை அவிழ்த்து நாயை விடுவிக்க முயற்சிக்கிறார்கள். ஆனாலும் நாய் குப்பை மேட்டு பக்கம் ஓடுகிறது. ஆனாலும் ரெண்டு, மூணு பேர் அந்த நாயை பிடித்து நிற்க வைத்து, குடத்தை ஒருத்தர் இழுக்க, நாயின் உடலை ஒருத்தர் பிடித்து கொள்ளவும்தான் தலை விடுவிக்கப்படுகிறது. இப்போதுதான் நாய்க்கு மூச்சே வருகிறது.
|
வீடியோ
தெரியாமல் குடத்துக்குள் தலையை நாய் விட்டிருந்தாலும், இதனை பார்ப்பதற்கு தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தண்ணீருக்காக அலைவது போல பரிதாபமாகவே இருக்கு!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications