இபி பில்.. அதென்ன புதுசா சேவைக்கட்டணம்? உண்மையா? மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சென்னை: ஏசி, வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் பயன்படுத்தும் வீடுகளில், சேவைக்கட்டணம் விதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், "தமிழகத்தில் மின் சாதன பயன்பாட்டை பொருத்து கூடுதல் கட்டணம் வசூல் கிடையாது" என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கமளித்துள்ளது.
அக்னி வெயில் தொடங்கவில்லை என்றாலும் கூட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக இயல்பாகவே மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. கோடை காலத்தில் மின்சார பயன்பாடு அதிகரிப்பதும், குளிர்காலத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடப்பதுதான். இப்படி இருக்கையில் மின்சார வழங்கல் விதிகளில் திருத்தம் செய்ய அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் சமீபத்தில் ஒரு கோரிக்கை ஒன்றை வைத்தது.

அதன்படி ஒவ்வொரு வீடுகளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக மின்சாரம் உபயோகிக்கப்பட்டால் அதற்காக வீட்டின் உரிமையாளர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதாவது, ஒரு வீட்டுக்கு 10 கிலோவாட் மின்சாரம் என்று ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த அளவைவிட அதிகமாக 11 கிலோவாட் அளவில் மின்சாரம் எடுக்கப்பட்டால் எத்தனை முறை கூடுதல் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதோ அத்தனை முறை அபராதம் செலுத்த வேண்டும்.
இரு மாத மின்சாரக் கட்டணத்தில் ஒரு விழுக்காடு அபராதமாக பெறப்படும். ஓராண்டில் மூன்று முறைக்கு மேல் அபராதம் செலுத்தினால், அவர்கள் கூடுதல் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என மின்சார வாரியம் கொடுத்த பரிந்துரையில் கூறியுள்ளது. மின்சார வாரியத்தின் இந்த கோரிக்கைக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், "குளிரூட்டி உள்ளிட்ட கருவிகளுக்காக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்தப்படுகிறது.
அவ்வாறு இருக்கும் போது அதற்கும் கூடுதலாக தண்டம் விதிப்பது நியாயமற்றது. ஏற்கனவே ரூ.12,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதத்தில் மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இத்தகைய சூழலில் அதிக மின் பயன்பாட்டுக்காக தண்டம் விதித்தால் மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது! மாதத்திற்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் கணக்கிடப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
மின்வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் சேவை நோக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மக்களை கொடுமைப்படுத்தும் வகையில் கட்டண சுமையை ஏற்றக் கூடாது. எனவே, அதிக மின்சாரம் எடுப்பதற்காக தண்டம் விதிக்கும் முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கமளித்துள்ளது. அதில், 'தமிழகத்தில் மின் சாதன பயன்பாட்டை பொருத்து கூடுதல் கட்டணம் வசூல் கிடையாது' என்று கூறியிருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications