சென்னையில் ஆன்லைன் வகுப்பில் படிக்க வந்த மாணவி.. தோழியின் தந்தை செய்த பகீர் காரியம்!
சென்னை: சென்னையில் ஆன்லைன் வகுப்பில் படிக்க வந்த மாணவிக்கு சந்தேகத்தை நிவர்த்தி செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த தோழியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அடையாறு தாமோதரபுரம் புது தெருவில் வசிப்பவர் சசிகுமார் (43). இவர் அந்த பகுதியில் வீடு புரோக்கராக உள்ளார். அத்துடன் கட்டுமான தொழிலும் செய்து வருகிறார்.
இவருக்கு 12 வயதில் மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறாள். எதிர் வீட்டில் வசிக்கும் 12 வயது சிறுமியும் சசிகுமாரின் மகளும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். இருவரும் தோழிகள் ஆவர்.

எதிர் வீட்டு சிறுமி
தினசரி தனது தோழியுடன் இணைந்து ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்காக எதிர் வீட்டு சிறுமி, சசிகுமார் வீட்டுக்கு வந்து செல்வாராம்., தோழியுடன் சேர்ந்து படிக்கும் சமயத்தில் சசிகுமாரிடம் பாடத்தில் சந்தேகம் கேட்பது வழக்கமாம். .

பெற்றோர் அதிர்ச்சி
அப்படித்தான் கடந்த 6ம் தேதி தனது வீட்டுக்கு வந்த எதிர் வீட்டு சிறுமியை, வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி சசிகுமார் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டாரம். இதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், து அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, சசிகுமாரை போக்சோவில் கைது செய்தனர்.

பேத்திக்கு கொடுமை
சென்னையில் இன்னொரு கொடுமையான சம்பவமும் நடந்துள்ளது. பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் 60 வயது தாத்தா
எம்ஜிஆர் நகரை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது அம்மா உடன் வியாசர்பாடியில் உள்ள மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு அவரது அம்மா மட்டும் குடும்பத்தினர் வெளியில் சென்றுள்ளார்கள்.

போக்சோவில் கைது
வீட்டில் 10 வயது சிறுமியின் தாத்தா ரகு என்ற டேவிட் மட்டும் இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து ரகுவின் மகள் (சிறுமியின் தாய்) வீடு திரும்பியபோது, மகள் அழுது கொண்டிருப்பததை கண்டு விசாரித்துள்ளார். அப்போது, தாத்தா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தாள். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி, எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து டேவிட்டை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்