கிளாம்பாக்கத்தில் வரப்போகும் பிரம்மாண்ட முதல் மால்.. 35 மாடி கட்டிடம்.. தரமாக மாறும் தாம்பரம்
சென்னை: கிளாம்பாக்கம் வண்டலூர் சாலையில் 233,685 சதுர அடி இடத்தில் வரப்போகிறது முதல் மால், மேலும் அதே இடத்தில் வரப்போகிறது 35 மாடி கட்டிடம்..இதை பற்றி விரிவாக பார்ப்போம்.
சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளதால், அதனை சுற்றி ரியல் எஸ்டேட் திட்டங்கள் தாறுமாறாக வளர்ச்சி அடைந்து வருகிறது. வரும் காலத்தில் தாம்பரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிக அளவு நிறுவனங்கள் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தால் சென்னைக்குள் ஏற்பட்டு வந்த கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடந்து வந்தது. 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.397 கோடி மதிப்பில் 2018-ம் ஆண்டு இந்த பணிகள் தொடங்கப்பட்டது.
கோயம்பேடு போல் இல்லாமல், பேருந்துகளை நெரிசல் இன்றி நிறுத்தவும், பயணிகள் எளிதாக பயணம் செய்யும் வகையிலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அதிநவீன வசதியுடன் அழகிய வடிவத்தில் கட்டப்பட்டிருந்தது. இந்த பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டத்துக்கு செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
ஆம்னி பேருந்துகள் இன்னும் கிளாம்பாக்கத்திற்கு வரவில்லை.. முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளின் முனையம் முழுமையாக கட்டி முடிக்கும் வரை கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகளை இயக்குவோம் எனறு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பராமரிக்க கோயம்பேட்டில் தான் வசதிகள் உள்ளதால் அவர்கள் கூறுவதால், கிளாம்பாக்கத்திற்கு மாறாக சில மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது.
இது ஒருபுறம் எனில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே ரயில் நிலையம் அமைக்கும் பணியினை உடனடியாக துவங்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் திறக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே பேருந்து நிலையம், வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகியவை இருக்கும் நிலையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வந்த பின்னர் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் கிளாம்பாக்கத்தை ஒட்டிய பகுதியில் ரியல் எஸ்டேட் முதலீடுகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஜிஎஸ்டி சாலையில் செங்கல்பட்டு வரை ஏராளமான நிறுவனங்கள் அமைந்துள்ளன. பல ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளும் இருக்கின்றன. எனினும் சென்னை நகருக்குள் இருப்பது போன்ற மால், வணிக தளங்கள் இல்லை. இதேபோல் வண்டலூர் கேளம்பாக்கம் சாலையும் பெரிய வளர்ச்சி பெறவில்லை. இனி இந்த பகுதிகளில் விரைவில் மால் மற்றும் மிகப்பெரிய வணிகதளங்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ரயில் நிலையமும், பேருந்து நிலையமும் ஒன்றாக அமைந்துள்ள இடங்கள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வணிக நிறுவனங்கள் குவிந்துள்ளன. அந்த வகையில் கிளாம்பாக்கமும் இன்னும் சில மாதங்களில் உருவெடுக்க போகிறது.
அதை நிரூபிக்கும் வகையில் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ரியல் எஸ்டேட் நிறுவமான காஸாகிராண்ட் நிறுவனம் கேளம்பாக்கம் வண்டலூர் கிளாம்பாக்கம் சாலையில் 233685 சது அரடி இடத்தில் தரைத்தளம் மற்றும் 3 மாடிகளுடன் ஒரு மாலுக்கான சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. சென்னை விஐடிக்கு எதிரே தான் இந்த மால் வரப்போகிறது. இந்த மாலில் சூப்பர் மார்க்கெட், தியேட்டர், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அமைய உள்ளது. மேலும் இதேநிறுவனம் 35 மாடி கட்டிடத்தை அங்கு அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ஆரம்பம்தான் .. இன்னும் பல வணிக நிறுவனங்கள் கிளாம்பாக்கத்தில் கடையை பரப்ப அதிக வாய்ப்பு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications