Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆபரேஷன் 7000".. யாருமே இல்லைனா கடைசியில் ஸ்டாலின்தான்.. பாஜகவின் பளீர் பிளான்! திக்கு தெரியாத ஜெகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக பாஜக முக்கியமான சில திட்டங்களை வகுத்து இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென் மாநிலங்களை குறி வைத்து பாஜக முக்கியமான சில திட்டங்களை வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக இந்த முறை தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த வருடம் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த முறை பாஜக கூட்டணி சார்பாக முன்னிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் பெரும்பான்மை வாக்குகளை பெற்று இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆனார்

இந்த முறை பொதுவான ஒரு வேட்பாளரை நிறுத்தி, தென் மாநில கட்சிகளின் ஆதரவை பெற்று எப்படியாவது குடியரசுத் தலைவரை தேர்வு செய்யலாம் என்று பாஜக நினைத்து வருகிறதாம். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை மாதம் 24-ந் தேதி நிறைவடைகிறது.

 பாஜக பிளான்

பாஜக பிளான்

ஏனென்றால் பாஜகவிற்கு இந்த முறை குடியரசுத் தலைவர் வேட்பாளரை வெற்றிபெற செய்வது அத்தனை எளிமையான காரியம் கிடையாது. கடந்த முறை பாஜக கூட்டணி சார்பாக முன்னிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் பெரும்பான்மை வாக்குகளை பெற்று இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆனார். இவருக்கு ஆதரவாக 65.65 சதவிகித வாக்குகள் விழுந்தன. இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் களமிறக்கிய மீரா குமாருக்கு ஆதரவாக 34.35% வாக்குகள் விழுந்தன.

வாக்குகள் எவ்வளவு

வாக்குகள் எவ்வளவு

51 சதவிகித வாக்குகள், அல்லது அதற்கு கூடுதலாக வாக்குகள் பெறும் நபர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். இந்த முறை பாஜக கூட்டணிக்கு எம்பி, எம்எல்ஏ எல்லாம் சேர்த்து 5.42 லட்சம் வாக்குகள் உள்ளன. எதிர்க்கட்சிகளின் திமுக, காங்கிரஸ் எல்லாம் சேர்த்து 4.49 லட்சம் வாக்குகள் உள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்தம் 10.98 லட்சம் வாக்குகள் உள்ளன. இதில் பாதி 5.49 லட்சம் வாக்குகள் பெற்றால் வெற்றி பெற முடியும்.

ஆப்ரேஷன் 7000

ஆப்ரேஷன் 7000

ஆனால் பாஜகவிற்கு தோராயமாக 7000 வாக்குகள் குறைவாக உள்ளன. இந்த 7000 வாக்குகளை பெறுவதற்கான ஆபரேஷனில்தான் பாஜக இறங்கி உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக தனிப்பட்ட பலம் 312ல் இருந்து 255ஆக குறைந்துள்ளது. மணிப்பூரில் 21ல் இருந்து 32ஆக அதிகரித்துள்ளது. கோவாவில் 13ல் இருந்து 20 ஆக உயர்ந்துள்ளது. உத்தரகாண்டில் 57ல் இருந்து 47 ஆக குறைந்துள்ளது.

 தேர்தல் சரிவு

தேர்தல் சரிவு

கோவா, மணிப்பூரில் அதிகரித்தாலும் உத்தர பிரதேசத்தில் பாஜக வெகுவாக எம்எல்ஏக்களை இழந்துள்ளது. இந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் காரணமாக பாஜகவிற்கு குடியரசுத் தலைவரை தனியாக தேர்வு செய்வதற்கான வாய்ப்பு கிட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாக மீதமுள்ள 7000 வாக்குகளை பெற பாஜக தீவிரமாக முயன்று வருகிறதாம். கணக்குப்படி இன்னும் 10 எம்பிக்கள் வேறு கட்சியில் (என்டிஏ அல்லாத) இருந்து ஆதரவு கொடுத்தால் கூட பாஜக கூட்டணி வேட்பாளர் வென்றுவிட முடியும்.

திமுக

திமுக

அதாவது ஒரு எம்பியின் வாக்கு எண்ணிக்கை 708 ஆகும். இதனால் இன்னும் 10 எம்பிக்கள் ஆதரவு தேவை. தென் மாநிலங்களை எடுத்துக்கொண்டால் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆதரவை கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. அக்கட்சியிடம் 22 எம்பிக்கள் உள்ளனர். அக்கட்சி ஆதரவு கொடுத்தால் பாஜக எளிதாக தங்கள் குடியரசுத் தலைவர் வேட்பாளரை வெற்றிபெற செய்ய முடியும். அதாவது நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவை சேர்த்து.. ஜெகன் ஆதரவும் இருக்கும் பட்சத்தில் பாஜக வேட்பாளர் வெல்ல முடியும்.

பொது வேட்பாளர்

பொது வேட்பாளர்

இதற்காகவே பொது வேட்பாளர் என்ற முறையை பாஜக கையில் எடுக்க உள்ளதாம். தென்னிந்தியர் ஒருவரை பாஜக களமிறக்க வாய்ப்புகள் உள்ளன. துணை குடியரசுத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடு இந்த ரேஸில் முன்னிலையில் இருக்கிறார். அவர் திமுகவின் ஆதரவை பெற முயன்று வருகிறாராம். இவர் இல்லை என்றால் ஆந்திராவை சேர்ந்த ரெட்டி பின்னணி கொண்ட ஒருவரை பாஜக களமிறக்க முயலலாம். ஜெகனை மனதில் வைத்து பாஜக இந்த மூவை செய்யும் என்கிறார்கள்.

 ஜெகன்

ஜெகன்

நிதிஷ் குமார் - பாஜக இடையே லேசான கருத்து வேறுபாடு இருப்பதால் பாஜக சேஃப்டிக்கு இன்னும் கூடுதலாக வாக்குகளை சேகரிக்க வேண்டி இருக்கும். இந்த நிலையில்தான் ஜெகன் இதுவரை ஆதரவு குறித்து வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஜெகன் பாஜகவுடன் நேரடியாக மோதல் போக்கை எல்லாம் கடைபிடிக்கவில்லை. ஆளுநர் - ஆந்திர பிரதேச உறவும் தெலுங்கானா போல மோசமாக எல்லாம் இல்லை.

 ஸ்டாலின் வாய்ப்பு

ஸ்டாலின் வாய்ப்பு

இதனால் ஜெகன் பாஜகவிற்கு ஆதரவு கொடுக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாம். ஆனால் ஜெகனின் தனிப்பட்ட அரசியலுக்கு ஆந்திராவில் இது சிக்கலாக முடியும் என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் ஜெகன் தரப்பு திக்கு தெரியாமல் இருக்கிறதாம். ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவு உறுதியாகாத பட்சத்தில் திமுக போன்ற பெரிய கட்சிகளின் ஆதரவை பாஜக அணுகும் என்கிறார்கள். யாருமே இல்லைனா கடைசியில் ஸ்டாலின்தான் பாஜகவின் சாய்ஸ் என்கிறார்கள் .

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி

அதன்படி திமுகவும் ஏற்கும் ஒருவரை வேட்பாளராக அறிவித்து, திமுக ஆதரவை பெற பாஜக நினைக்குமாம். ஆனால் அதுவும் கூட லாஸ்ட் ஆப்ஷன்தான் என்கிறார்கள். பிஜு ஜனதா தளம் இருக்கிறது. இது போக மற்ற சில சிறிய கட்சிகள் உள்ளன. மேலும் ஆம் ஆத்மி இருக்கிறது. பஞ்சாப்பில் இவர்களின் எம்எல்ஏ பலத்தை வைத்து வாக்குகளை அள்ள முடியும் என்பதால் அந்த கட்சிகளிடமும் பாஜக தூது விட்டுக்கொண்டு இருக்கிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+