வாழ்க்கையே போயிடுச்சு.. சென்னையில் காதலனின் கல்யாணத்தை தடுக்க வந்த காதலி... ஆட்டோவில் தூக்கிய போலீஸ்
சென்னை வண்ணாரப்பேட்டை சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் தேவாலயத்தில் லீஜின் என்பவரின் திருமணம் நடைபெற்றது.இந்த திருமணத்தை நிறுத்துவதற்காக அவரை காதலித்த பெண் சர்ச்சிற்கு வந்தார். அவரை போலீசார் குண்டுக்கட்டாக ஆட்டோவில் தூக்கிக்சென்றனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம். தன்னை ஏற்கனவே திருமணம் செய்துவிட்டு ஏமாற்றியதாக அந்த பெண் குற்றம்சாட்டி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் போன் தயாரிப்பு தொழிற்சாலையில் பிரியதர்ஷினி என்பவர் வேலை செய்து வந்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நித்திரவிளை நெய்தமங்கலத்தைச் சேர்ந்த லிஜீன் (27 வயது) என்பவரும் அதேபோன் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதன் காரணமாக பழக்கம் ஏற்பட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் லிஜீனுக்கும் பிரியதர்ஷினிக்கும் கடந்த ஆண்டு நண்பர்கள் முன்னிலையில் தேவாலயத்தில் திருமணம் நடந்ததாகவும், தாம்பரம் சேலையூரில் வீடு எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும், இருமுறை அபார்ஷன் ஏற்பட்டதாகவும் பிரியதர்ஷினி கூறுகிறார்.

இந்நிலையில் திடீரென லிஜீனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து லிஜீனுக்கு சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தேவாலயத்தில் அந்த பெண்ணுடன் திருமணம் நடைபெறப்போவதாக தகவல் பிரியதர்ஷினிக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பாக பிரியதர்ஷினி போலீசாரிடம் வழக்கறிஞர்கள் மூலம் புகார் அளித்துள்ளார். புகார் ஒருபுறம் எனில், திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்த பிரியதர்ஷினி, தன்னை காதலித்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தேவாலயத்தில் திருமணம் நடைபெறுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் வந்து அந்த பெண்ணை சமாதானம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றுள்ளனர். ஆனால் பிரியதர்ஷினி வர மறுத்து ஆவேசத்துடன் கேள்விகளை எழுப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் அவரை சமாதானம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முடியாததால், பிரியதர்ஷினியை மகளிர் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றினார்கள்.
அப்போது அந்த பெண் வரமறுத்து, என் வாழ்க்கையே போய்விட்டது என்று கதறி அழுதார்.. அப்போது அவரிடம் போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரிப்போம் என்று கூறினர் . ஆனால் முடியாது என்று அவர் மறுத்துள்ளார். இதனால் பிரியதர்ஷினியை வலுக்கட்டாயமாக போலீசார் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கும் அந்த பெண் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications