7 வது முறையும் திமுக ஆட்சி.. இதுதான் நம்ம டார்கெட்.. செயற்குழுவில் முழங்கிய ஸ்டாலின்!
சென்னை: கடந்த தேர்தல்களில் பெற்ற வாக்கு சதவிகித கணக்கில் எடப்பாடி பழனிசாமி காற்றில் கணக்கை போட்டு கற்பனையில் கோட்டை கட்டுகிறார் என்றும், திமுக என்றால் கத்தி கத்தி பேசும் எடப்பாடி, பிரதமர் மோடியை எதிர்த்து பேச தைரியம் இருக்கிறதா, துணிவு இருக்கிறதா? என்றும் திமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். மேலும் 2026 தேர்தலில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும், 200 வெல்வோம் என்றும் ஸ்டாலின் பேசினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைமை செயற்குழு கூட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, 2026 சட்டசபை தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல வேண்டும், மத்திய அரசு மற்றும் அமித்ஷாவை கண்டிக்கும் வகையில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்றகுழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- 2019 லோக்சபா தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 19.4 சதவிகித வாக்குகளை பெற்றது. 2024 லோக்சபா தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 20.4 சதவிகித வாக்குகளை தான் பெற்றுள்ளது. அதற்கு முந்தைய தேர்தலை விட 14 தொகுதிகளில் அதிகமாக போட்டியிட்ட அதிமுக 12.58 சதவிகித வாக்குகளை குறைவாக பெற்றுள்ளது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி காற்றில் கணக்கை போட்டு கற்பனையில் கோட்டை கட்டுகிறார். ஜெயலலிதா வழக்கில் நீதிபதி குமாரசாமி போட்ட கணக்கை மிஞ்சும் வகையில் எடப்பாடி பழனிசாமி கணக்கு போடுகிறார். அவர் சொல்லும் கணக்கை அடிப்படை அறிவு உள்ள அதிமுகவினரே நம்ப மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி எவ்வளவு தான் கதறினாலும் அவருடைய துரோகங்களும், குற்றங்களும் தான் மக்களுக்கு ஞாபகம் வரும்.
பிரதமர் மோடியை எதிர்த்து பேச எடப்பாடிக்கு தைரியம் இருக்கிறதா, துணிவு இருக்கிறதா? திமுக என்றால் மட்டும் எடப்பாடி கத்தி கத்தி பேசுகிறார். டங்க்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக எடப்பாடி பாஜகவை கண்டித்தாரா? திமுக என்றால், கொள்கையும், அதை நிறைவேற்றும் தியாகமும் தான் அடிப்படை. வரும் 2026 தேர்தலில் 200 வெல்வோம். 2026 தேர்தலில் வெல்லப்போவது திமுக கூட்டணி தான்
7 வது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் இலக்கு. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications