சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்களின் நலனையே அரசு காக்க வேண்டும்.. கார்ப்பரேட் நிறுவனங்களை அல்ல.. வெற்றிமாறன் கருத்து

Google Oneindia Tamil News

சென்னை: அரசு மக்களின் நலனையே காக்க வேண்டும் என்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை அல்ல என்றும் - விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இயக்குனர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஆண்டும் நவம்பர் இறுதியில் தொடங்கி இன்று வரை விடாமல் போராடி வருகிறார்கள்.

The government should protect the welfare of the people, not the corporate : Vetrimaran

மத்திய அரசு பலமுறை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் விவசாயிகள் வேளாண் சட்டத்தை ரத்து செய்வது மட்மே தங்களுக்கு தீர்வு என்று கூறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

அதேநேரம் மத்திய அரசு வேளாண் சட்டத்தை ரத்து செய்ய மறுத்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் வேளாண் சட்டத்தை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்திவைப்பதாக அறிவித்தது. ஆனால் இதனை ஏற்க விவாயிகள் மறுத்துவீட்டனர்.

வேளாண் சட்டம் நடைமுறைக்கு வந்தால் அது விவசாயிகளுக்கு சாதகமாக இல்லாமல் கார்ப்பரேட்களுக்கு சாதகமாக இருக்கும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்து எதிர்க்கிறார்கள். வேளாண் சட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை என்று கூறும் விவசாயிகள் , இதனால் பின்னாளில் வேளாண் சட்டம் கார்ப்பரேட்களுக்கு சாதகமாகிவிடும் என்று அஞ்சுகிறார்கள்.

விவசாயிகள் போராட்டம்.. விவசாயிகள் போராட்டம்.. "சரியானதை செய்யுங்கள்.." முதல் முறையாக கருத்து சொன்ன சல்மான் கான்

இதனை மத்திய அரசு மறுத்துள்ள நிலையில், போராட்டங்கள் இன்று வரை டெல்லியில் விடாமல் நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருவதுடன், உள்ளூர் நட்சத்திரங்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி கூறுகையில், மக்களின் நலனையே அரசு காக்க வேண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களை அல்ல என்று தெரிவித்துள்ளார்.

English summary
asuran director Vetrimaran support farmers protest. he said that The government should protect the welfare of the people, not the corporates
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X