பாண்டி பஜார் பக்கம் போறீங்களா? பைக்கில் இனி செல்வது கஷ்டம்.. வந்தது புதிய ரூல்! களமிறங்கிய டீம்!
சென்னை: கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் சார்பாக பாண்டி பஜாரில் நிறுத்தப்பட்டு இருக்கும் பைக்குகள் நீக்கப்பட்டு வருகின்றன. நடைபாதையில் பார்க் செய்யப்படும் பைக்குகள் அகற்றப்படும் பணிகள் இனி தினசரி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதோடு கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் சார்பாக தி நகரில் தெருக்களில் பார்க்கிங் கட்டணத்தை ஒரு மணி நேரத்திற்கு ₹75 முதல் ₹100 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. தி நகர் பகுதியில் போக்குவரத்தை குறைக்க வரி, கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. ஏற்கனவே அங்கே உள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங்கான.. MLCP பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்த கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. அங்கே மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டணம் வெறும் 20 ரூபாய்தான். ஆனால் அதை மக்கள் பயன்படுத்தாமல் சாலை ஓரங்களில் நிறுத்துகின்றனர்.
கார் பார்க்கிங் கட்டணம்
இது போக சென்னையில் சாலை ஓரங்களில் பார்க் செய்யப்படும் வாகனங்களை கண்காணிக்க எக்ஸ் ஃபோர்ஸ் படைகளை தமிழ்நாடு அரசு களமிறக்கி உள்ளது. அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் தவறான நிர்வாகம் என்ற பல புகார்களுக்குப் பிறகு, சென்னை மாநகராட்சி தற்போது தமிழ்நாடு முன்னாள் போலீஸ் அதிகாரிகளின் "எக்ஸ் போர்ஸ்" படையை களமிறக்கி உள்ளது.
சென்னையில் உள்ள 14,000-க்கும் மேற்பட்ட தெரு பார்க்கிங் வசதிகளை நிர்வகிக்கும் வகையில் முன்னாள் போலீஸ் அதிகாரிகளை களமிறக்கி உள்ளது. இப்போது பார்க்கிங்கின் நிர்வாகத்தை சிவில் அமைப்பே நேரடியாகக் கையாண்டு வருகிறது. இரு சக்கர வாகனத்திற்கு ரூ.5 மற்றும் காருக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் இதில் பல முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுவதால் முன்னாள் போலீஸ் அதிகாரிகளின் படையை தமிழ்நாடு அரசு இங்கே களமிறக்கி உள்ளது. பார்க்கிங் மாற்றம்: சென்னையில் பல இடங்களில் சாலைகளில் வாகனங்களை பார்க்கும் செய்யும் வழக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் எந்த இடத்தில் யார் பார்க் செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளத. இந்த புதிய பிரசச்னையை தீர்க்க புது பார்க்கிங் விதிமுறைகளை தமிழ்நாடு அரசு கொண்டு வர உள்ளது.
சென்னை பார்க்கிங்
அதன்படி முதல் கட்டமாக சென்னை அண்ணா நகரில் வாகனங்களை பார்க் செய்ய கட்டணம் வசூலிக்கும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னையில் பல இடங்களில் படிப்படையாக இதன் மூலம் பார்க்கிங் விதிகள் மாற்றப்பட உள்ளன. சென்னையில் வாகன பார்க்கிங் தொடர்பாக கொள்கைகளை வகுக்கும்படியும், எல்லா இடங்களிலும் தேவைக்கு ஏற்ப பார்க்கும் செய்யும் முறையை தடுக்கவும் விதிகளை கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றில் தமிழ்நாடு அரசு சமீபத்தில் இது தொடர்பாக உறுதி அளித்துள்ளது.

சென்னையில் மக்கள் விதிமுறைகள் இல்லாமல் ஆங்கங்கே பார்க் செய்வதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இறுதிக் கொள்கை மூன்று மாதங்களுக்குள் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்று மாநில அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
இந்த வழக்கில் நீதிபதிகள் அப்போது பேசுகையில், சாலைகளில் வாகனங்களை இடையூறாக நிறுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் இறுதிக் கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர். சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து நிறுவனம் (சியுஎம்டிஏ) மோட்டார் வாகன பார்க்கிங் கொள்கை வரைவு கொண்டு வந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட துறைகளின் கருத்துகளைப் பெற்று மூன்று மாதங்களுக்குள் அது இறுதி செய்யப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.
அண்ணா நகர்
இந்த நிலையில்தான் சென்னை அண்ணா நகரில் வாகனங்களை பார்க் செய்ய கட்டணம் வசூலிக்கும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னையில் பல இடங்களில் படிப்படையாக இதன் மூலம் பார்க்கிங் விதிகள் மாற்றப்பட உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற கூட்டத்தில் CUMTA-வின் வரைவுக் கொள்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதில் சில பரிந்துரைகள் இணைக்கப்பட்டதாகவும் முதல் டிவிஷன் பெஞ்ச் தெரிவிக்கப்பட்டது. இந்த வரைவு கொள்கை கொள்கையாக முழுமையாக 3 மாதங்களில் மாற்றப்பட உள்ளது.
இந்த வரைவுக் கொள்கை நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல், வீடு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்களுக்கு அவர்களின் கருத்துக்களுக்காக அனுப்பப்பட்டது. அந்தத் துறைகளின் கருத்துகளைப் பெற்ற பிறகு, கொள்கை இறுதி செய்யப்பட்டு செயல்படுத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், வாகனங்களை எங்கே எல்லாம் பார்க் செய்யலாம் எங்கே எல்லாம் பார்க் செய்ய கூடாது தவறான இடங்களில் பாரக்ஸ் செய்தால் என்ன நடவடிக்கை, என்ன அபராதம், ஒரு இடத்தை பார்க்கிங் இடமாக மாற்ற எப்படி அனுமதி பெறுவது என்பது உள்ளிட்ட விதிகள் வகுக்கப்படும்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications