உயிரைவிட இதுதான் முக்கியமா?.. துணி, நகைக்கடைகளில் அலை அலையாக குவிந்த மக்கள்.. என்னதான் காரணம்?
சென்னை; தமிழகத்தில் பல்வேறு இடங்களில் துணி மற்றும் நகைக்கடைகளில் இன்று மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நாளை முதல் தீவிர லாக்டவுன் அமலுக்கு வருகிறது. மிக கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த புதிய லாக்டவுன் நாளை அமலுக்கு வருகிறது.
காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்க கூட நாளையில் இருந்து அடுத்த ஒரு வாரத்திற்கு அனுமதி கிடையாது. அத்தியாவசிய பொருட்கள் நாளையில் இருந்து மக்களின் வீடு தேடி வர உள்ளது.

மக்கள்
இதனால் நேற்றும், இன்றும் தமிழகம் முழுக்க லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. மக்கள் தேவையான பொருட்களை வெளியே சென்று வாங்கிக்கொள்ளலாம் என்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுக்க மளிகை கடைகளிலும், காய்கறி கடைகளிலும் கூட்டம் அலைமோதிக்கொண்டு இருக்கிறது.

அலைமோதுகிறது
ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளில் குவிந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் தமிழகத்தில் மேலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று கூடிய கூட்டத்தால் மேலும் கேஸ்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அபாயம்
இந்த நிலையில் ஒரு பக்கம் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கூடினாலும் இன்னொரு பக்கம் தேவையே இன்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் துணி மற்றும் நகைக்கடைகளில் இன்று மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபல நகைக்கடைகளிலும், துணி கடைகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமணம்
இன்று அவசர அவசரமாக திருமணம் நடத்திய சிலரும் , லாக்டவுனுக்கு பின் திருமணம் ஏற்பாடு செய்திருக்கும் சிலரும் இப்படி கூட்டமாக வந்து ஆடைகள், நகைகளை வாங்கி சென்றனர். இதனால் பெரிய நகை மற்றும் துணை கடைகளில் கூட்டம் அதிகரித்தது. அவசர திருமணங்கள்தான் இந்த கூட்டத்திற்கு பின் காரணம் என்கிறார்கள்.
|
விமர்சனம்
பல இடங்களில் இன்று அவசர திருமணம் நடைபெற்றது. இதற்காக இவர்கள் நகை, உடைகளை வாங்கி இருக்கலாம் என்கிறார்கள். கொரோனா காலத்தில் மக்கள் அதை பற்றி அச்சப்படாமல் இப்படி உயிரை பணையம் வைத்தது பெரிய விமர்சனங்களை சந்தித்துள்ளது.












Click it and Unblock the Notifications