Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேருவிடம் ஆதீனம் தந்த செங்கோல்- 1947-ல் Hindu தலைப்பு செய்தியாக வெளியிட்டதா? அம்பலானது பாஜக முகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1947-ம் ஆண்டு நேருவிடம் திருவாவடுதுறை ஆதீனம் தங்க செங்கோல் தந்ததை இந்து நாளிதழ் அன்று தலைப்புச் செய்தியாகவே வெளியிட்டது என சமூக வலைதளங்களில் பாஜகவினர் பரப்பி வரும் தகவலையும் படங்களையும் தி இந்து நாளிதழ் குழுமத்தின் இயக்குநர் மாலினி பார்த்தசாரதி திட்டவட்டமாக போட்டோ ஆதாரத்துடன் மறுத்துள்ளார்.

"1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி திருவாவடுதுறை ஆதீனத்தை நாடிய மூதறிஞர் ராஜாஜி, சோழர் கால மரபுப்படி ஆட்சி மாற்றத்துக்கான நிகழ்வாக தங்க செங்கோல் ஒன்றை தயாரிக்க கேட்டுக் கொண்டார்; இதனடிப்படையில் உம்மிடி பங்காரு நகை கடையில் தங்க செங்கோல் ஒன்றை திருவாவடுதுறை ஆதீனம் தயாரித்து பெற்றுக் கொண்டார்; ராஜாஜியின் ஆதரவுடன் தனி விமானத்தில் டெல்லி சென்ற திருவாவடுதுறை ஆதீனம், மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் தங்க செங்கோலை கொடுத்து திருமறை ஓதி, புனித நீர் தெளித்து பின் அவர் நேருவிடம் ஆட்சி மாற்றத்துக்கான அதிகாரமாக செங்கோலை வழங்கினார். அப்படியான வரலாற்றுப் பெருமை மிக்க தங்க செங்கோலை நேருவின் வாக்கிங் ஸ்டிக் என அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைத்துவிட்டனர் காங்கிரஸ் கட்சியினர் .இந்த செங்கோலைத்தான் மீட்டு இப்போதைய புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் பெருமைப்படுத்தினார் பிரதமர் மோடி. திருவாவடுதுறை ஆதீனத்தை இம்முறையும் தனி விமானத்தில் அழைத்து வந்து ஆதீனங்களின் ஆசீர்வாதம் பெற்று, அந்த செங்கோல் முன்பாக நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கி லோக்சபா சபாநாயகர் இருக்கையில் நிறுவினார் பிரதமர் மோடி" - இதுதான் இன்றளவும் பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரப்பிவிடும் கருத்து.

The Hindu Director Malini Parthasarathy exposes BJPs bogus claim on Sengol

ஆனால் பாஜகவினரின் இத்தகைய பரப்புரைகள் அப்பட்டமான கட்டுக் கதைகள், புனைவுகள் என பல்வேறு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தனிப்பட்ட முறையில் திருவாவடுதுறை ஆதீனம் டெல்லி சென்று நேருவுக்கு தங்க செங்கோல் கொடுத்தார் அவ்வளவுதான்.. இது ஒரு அதிகாரப்பூர்வமான நிகழ்வும் அல்ல. அரசியல் முக்கியத்துவமானதும் அல்ல என தெரிவிக்கப்பட்டு வருகிறது. நாடு விடுதலை அடைந்தது தொடர்பான பல்வேறு நிகழ்வுகளின் ஆவணங்கள் அழியாமல் இன்னமும் இருக்கின்றன. அந்த ஆவணங்களிலும் கூட தங்க செங்கோலை ஆதீனம் டூ மவுண்ட் பேட்டன் டூ நேரு என்கிற நிகழ்வு எங்கும் பதிவாகவும் இல்லை என இடைவிடாமல் பதிலடி தரப்பட்டு வருகிறது.

The Hindu Director Malini Parthasarathy exposes BJPs bogus claim on Sengol

இந்நிலையில்தான் @Bobbycal என்ற பெயரிலான நெட்டிசன், இதோ இந்து நாளிதழே தலைப்புச் செய்தியாக வெளியிட்ட ஆதாரத்தைப் பாருங்க என ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். அதில் 1947-ம் ஆண்டு இந்து நாளிதழில் முகப்பு பக்கத்தில் திருவாவடுதுறை ஆதீனம் படம், தங்க செங்கோல், திருவாவடுதுறை ஆதீனம் டெல்லிக்கு புறப்படும் படம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதுதான் நாங்கள் சொல்லும் அத்தனைக்கும் ஆதாரம் என படுதீவிரமாக பாஜகவினர் இந்த செய்தியை பரப்பிக் கொண்டிருந்தனர்.

The Hindu Director Malini Parthasarathy exposes BJPs bogus claim on Sengol

இப்போது தி இந்து பத்திரிகை குழும இயக்குநர் மாலினி பார்த்தசாரதி, 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ந் தேதி, திருவாவடுதுறை ஆதீனம் படம், தங்க செங்கோல், திருவாவடுதுறை ஆதீனம் டெல்லிக்கு புறப்படும் படம் ஆகியவற்றுடனான இந்து நாளிதழின் பக்கத்தை முழுமையாக ஸ்கேன் செய்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் @Bobbycal என்ற நெட்டிசன் சொல்வதைப் போல இந்து நாளிதழ் தலைப்பு செய்தியாக இதனை வெளியிடவே இல்லை. அப்படி அவர் வெளியிட்டிருப்பது போட்டோஷாப்பில் எடிட் செய்யப்பட்ட போலி பக்கம். இந்து நாளிதழின் உள்பக்கத்தில் செங்கோல் தொடர்பான விவரம் ஒரு விளம்பரமாக மட்டுமே திருவாவடுதுறை ஆதீனத்தால் கொடுக்கப்பட்டது. அந்த உள்பக்க விளம்பரச் செய்தி இடம்பெற்றுள்ள பக்கத்தை அப்படியே ஸ்கேன் செய்து இதில் கொடுத்திருக்கிறோம். அதாவது திருவாவடுதுறை ஆதீனம் தங்க செங்கோல் கொடுத்ததை இந்து நாளிதழ் ஒரு செய்தியாக வெளியிடவில்லை; அதனை ஒரு விளம்பரமாக மட்டுமே வெளியிட்டது என்பதையே மாலினி பார்த்தசாரதி ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறார்.

மாலினி பார்த்தசாரதி தமது ட்விட்டர் பதிவின் மூலம் சொல்லி இருப்பவை இவைதான்:

- திருவாவடுதுறை ஆதீனம் தங்க செங்கோல் அளித்ததை இந்து நாளிதழ் ஒரு செய்தியாக வெளியிடவே இல்லை

- திருவாவடுதுறை ஆதீனம், செங்கோல் தந்ததாக சொல்லி விளம்பரம் தந்ததை மட்டுமே நாடு விடுதலை அடைந்து 15 நாட்கள் கழித்து ஒரு விளம்பரமாக இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.

- திருவாவடுதுறை ஆதீனம், அரசு சார்பாக, அரசு நிகழ்வாக தங்க செங்கோல் தரவில்லை என்பதை அவரது சொந்த காசில் கொடுத்த விளம்பரமே ஊர்ஜிதம் செய்துவிட்டது.

- மேலும் திருவாவடுதுறை ஆதீனத்தை தனி விமானத்தில் அன்று டெல்லியில் அழைத்துச் சென்றதாக சொல்வதை மறுக்கும் வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி புறப்படும் குழு படத்தை திருவாவடுடுதுறை ஆதீனம் சொந்த காசில் கொடுத்த விளம்பர படத்தின் மூலம் தெரிவித்தும் உள்ளனர். ஆக செங்கோல் தொடர்பான பாஜகவினர் கருத்துகள் அனைத்தும் கட்டுக்கதைகள் என்பதையே இந்த இந்து நாளிதழ் செய்தி உறுதிப்படுத்துகிறது என்கின்றனர் பாஜக அல்லாத எதிர்க்கட்சியினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+