கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் திறப்பு தள்ளிப்போகிறது.. ஸ்டாலினின் திட்டம் என்ன?
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் கட்டும் பணி இன்னமும் முடியாத காரணத்தால் திறப்பு விழா மேலும் இரண்டு மாதங்களுக்கு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி வயது முதிர்வினால் காலமானார். தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு சென்னை மெரீனாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்,

விதிஎண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசும் போது, கலைஞர் ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப்படங்களுடன் சென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்றார்.
அதன்படியே சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணிகள் நடந்தது.
அவரது சாதனைகள், சிந்தனைகளை அடுத்த தலைமுறை அறியும் வகையில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்று முகப்பில் கருணாநிதி நினைவிடத்தில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் ஆகியவையும் அமைகிறது. முன்னதாக கலைஞர் கருணாநிதி நினைவிடத்தை அவரது நினைவு நாளான ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி திறக்க முதலில் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டார்.
ஆனால் வேலைகள் முடிவடையாததால் திறப்பு தள்ளி போனது. அதன் பிறகு இந்த மாதம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந்தேதி திறக்கலாமா? என்றும் ஆலோசித்தார்கள். ஆனாலும் பல்வேறு பணிகள் முடிவடையாத காரணத்தால் அந்த தேதியும் தள்ளிப்போயுள்ளது.
ஏனெனில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15 தேதி அன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதனால் இன்னும் 2 மாதங்கள் கழித்தே கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications