நாடு முழுக்க பல ஆயிரம் பேருக்கு செக்.. மாசம் மாசம் வருமான வரி காட்டுறீங்களா? அப்போ இதை நோட் பண்ணுங்க
சென்னை: நாடு முழுக்க 40 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வருமான வரித்துறை
சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாம். அவர்களின் வருமான வரி முறைகேடுகள்
அல்லது தவறுகள், வருமான வரி தாக்கலில் அவர்கள் செய்த குளறுபடிகள் தொடர்பாக விளக்கம் கேட்டு மெயில் அனுப்பி உள்ளனர்.
இந்த நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

யாருக்கெல்லாம் நோட்டீஸ் அனுப்பப்படும்
1. அடிக்கடி வருமான வரி தாக்கலில் முறைகேடு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
2. அடிக்கடி பொய்யான ஆவணங்களை தந்து வருமான வரி தாக்கல் செய்பவர்கள் இந்த
சிக்கலில் மாட்டுவார்கள்.
3. பொய்யான கணக்கு காட்டி விலக்கு பெற்றவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
4. இவர்கள் நோட்டீஸுக்கு விளக்கம் தந்து கூடுதல் வரியை செலுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.
5. அவர்கள் செய்த தவறை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பறக்கும் நோட்டீஸ்
நாடு முழுக்க பல சம்பளதாரர்களுக்கு வருமான வரித்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த முறை பொய்யான வீட்டு வாடகை பில்களை கொடுத்தவர்களை சோதனை செய்ய தொடங்கி உள்ளது. வருமான வரி விலக்கு பெறுவதற்காக பலரும் பொய்யாக வீட்டு வாடகை பில் கொடுக்கின்றனர்.
இந்த நிலையில் சிலர் 1 லட்சத்திற்கும் மேல் வருடம் வாடகை கட்டுவதாக கணக்கு காட்டுகின்றனர். இதற்கு பொய்யான பான் கார்டு விவரங்களை வீட்டு ஓனர் விவரம் என்று பலர் அளிப்பது உண்டு. முக்கியமாக பல சிஏக்கள் ஒரே மாதிரியான பொய்யான பான் கார்டு விவரங்களை பல கிளைண்டுகளுக்கு பயன்படுத்துவது உண்டு.
இப்படிப்பட்ட விவரங்களை வைத்து தவறாக refund பெறக்கூடியவர்களை வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகிறது. இவர்களுக்கு கடந்த 2 நாட்களாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. முக்கியமாக 1 லட்சத்திற்கு மேல் வாடகை கணக்கு காட்டியவர்களுக்குத்தான் பான் கார்டு அவசியம் என்பதால் அவர்களைத்தான் வருமான வரி துறை விசாரிக்க தொடங்கி உள்ளது. இவர்கள் விளக்கம் அளிக்க நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது. மார்ச் 31, 2024 இல் வரை இதற்காக காலக்கெடு உள்ளது. இதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் அதற்கு உரிய வரி மட்டும்.. 200%மாக உயர்த்தப்பட்டு அபராதமாக விதிக்கப்படும்.
இன்னொரு நோட்டீஸ்
அதேபோல் அரசியல்கட்சிகளுக்கு நிதி அளிக்கும் 80ஜிசிசி பிரிவில் கீழ் விலக்கு பெற்றவர்கள் அதற்கான சான்றை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 31, 2024 இல் வரை இதற்காக காலக்கெடு உள்ளது.
இதற்குள் திருத்திய வரி செலுத்துவோர் 25-50 சதவீத அபராதம் இல்லாமல் சிறு வரி முரண்பாடுகளை, வழக்குகளை தீர்க்க கூடுதல் அவகாசம் வழங்கப்படும்.
பொதுவாக வரி கட்டுவதில் குறைபாடு இருந்தால் அதற்கு 10% அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் இந்த திட்டத்தின் மூலம் அந்த அபராதம் இல்லாமல் வரியை மார்ச் 31ம் தேதிக்குள் கட்ட முடியும். ஆனால் சிறிய அளவிலான வரி முரண்பாடுகளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். அரசியல்கட்சிகளுக்கு நிதி அளிக்கும் 80ஜிசிசி பிரிவில் கீழ் விலக்கு பெற்றவர்கள் அதற்கான சான்றை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பலர் இதை பயன்படுத்தி விலக்குகளை பெற்ற நிலையில் அரசு இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 பட்ஜெட்டில் வருமான வரி ஸ்லாப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ₹10 லட்சம் வரை சம்பளம் வாங்கும் நபர்கள் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
₹10 லட்சம் வரை வருமானம் ஈட்டினால் வரி விலக்கு உறுதி, ₹15 முதல் 20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 25% வரி ஸ்லாப்பை அறிமுகப்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications