ஜார்ஜ் கோட்டைக்கு போறாரோ இல்லையோ.. சாவி விஜய் கையில்.. தவெகவிற்கு தேடி வரும்.. வீட்டோ பவர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களத்தில் இப்போது '20' என்ற எண் தான் மிக முக்கியமான
ஒன்றாக மாறியுள்ளது. சமீபத்திய சி-வோட்டர் (CVoter) ஆய்வின்படி, நடிகர்
விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) அடிப்படையில் 15% முதல் 22% வரையிலான
வாக்கு சதவீதத்தைப் பெறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த எண்கள்
உண்மையானால், 2026 சட்டமன்றத் தேர்தலில் யார் கோட்டையில் அமர வேண்டும்,
யார் அமரக்கூடாது என்பதைத் தீர்மானிக்கும் முடிவெடுக்கும் சக்தியாக விஜய்
உருவெடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

Election dmk aiadmk

மாற்றத்தை ஏற்படுத்தும் வாக்கு வங்கி

தமிழகத்தைப் பொறுத்தவரை, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும்
துருவங்களுக்கு இடையிலான வெற்றி வித்தியாசம் என்பது வழக்கமாக 3% முதல் 5%
வரை தான் இருக்கும். இத்தகைய சூழலில், ஒரு மூன்றாம் தரப்பு 20% வாக்குகளைத்
தன்வசம் வைத்திருப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல.

இந்த வாக்கு வங்கி விஜய்யிடம் இருக்குமானால், அவர் ஒரு "வீட்டோ" (Veto
Power) அதிகாரத்தைப் பெற்றவராக மாறுகிறார். அதாவது, அவர் நினைத்தால் ஒரு
கூட்டணியின் வெற்றியைத் தடுக்கவும் முடியும், அல்லது யார் ஆட்சி அமைக்கலாம்
என்று முடிவு எடுக்க முடியும். இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும்
தற்போதைய அரசியல் சூழலால் அதிருப்தியில் இருக்கும் நடுத்தர மக்களின்
வாக்குகளை விஜய் அறுவடை செய்து வருவது, தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு
ஒரு 'தொங்கு சட்டசபை' (Hung Assembly) உருவாவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் பலம் அவர் ஒரு "ஜூனியர் பார்ட்னராக" இருக்க விரும்பாததுதான்.
திமுக மற்றும் பாஜக என இருவேறு துருவங்களையும் அவர் சமமான தூரத்தில் வைத்துள்ளார்.

திமுகவின் சவால்: மதச்சார்பற்ற வாக்குகளை ஒருமுகப்படுத்தும் திமுகவுக்கு,
விஜய்யின் வருகை பெரும் கவலையைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக,
தமிழ் தேசியம் மற்றும் இளைஞர்களுக்கான அதிகாரம் என்ற விஜய்யின் முழக்கம்
திமுகவின் வாக்கு வங்கியில் ஒரு விரிசலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அதிமுகவின் நெருக்கடி: ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளைப் பெற்று மீண்டும்
ஆட்சிக்கு வரத் துடிக்கும் அதிமுகவுக்கு, 20% வாக்குளை விஜய் பிரிப்பது ஒரு
மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமையும்.

ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி

நேற்று வெளியான இந்தியா டுடே - சி-வோட்டர் (C-Voter) Mood of the Nation
ஆய்வு முடிவுகள், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சிக்கு
நல்ல வாக்கு வங்கி உள்ளதாக மறைமுகமாக தெரிவிக்கின்றன.

தற்போதைய சர்வேயின்படி, திமுகவின் இந்தியா கூட்டணி 45 சதவிகிதத்தையும்,
பாஜக என்டிஏ கூட்டணி 33% வாக்குகளையும் பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
தவெக 15% முதல் 22% வரையிலான வாக்கு சதவீதத்தை எட்டக்கூடும் என அரசியல்
நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த எண்கள் அதிகாரப்பூர்வமானவை அல்ல என்றாலும்,
கள நிலவரம் மற்றும் விஜய்யின் பொதுக்கூட்டங்களுக்குத் திரளும் தன்னார்வக்
கூட்டம் இந்த ஊகங்களுக்கு வலு சேர்க்கின்றன. குறிப்பாக, முதல்முறை
வாக்காளர்கள் மற்றும் பாரம்பரிய கட்சிகளின் மீது அதிருப்தியில் உள்ள
இளைஞர்களின் வாக்குகளை விஜய் ஈர்த்து வருவதாகத் தெரிகிறது.

தமிழக வரலாற்றில் ஒரு மூன்றாவது அணி 10% வாக்குகளைத் தாண்டினாலே (உதாரணமாக
2006-ல் தேமுதிக), அது பெரிய கட்சிகளின் வெற்றியைத் தீர்மானித்தது. ஆனால்
விஜய் அதைக் காட்டிலும் இருமடங்கு செல்வாக்குடன் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது.

இந்த வாக்கு வங்கியின் மூலம் விஜய் இரண்டு விதங்களில் ஆட்சியைத் தீர்மானிக்கலாம்:

வாக்குகளைப் பிரிப்பதன் மூலம்: சுமார் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஒரு
கூட்டணியின் வெற்றியைத் தடுத்து, யார் ஆட்சியை இழக்க வேண்டும் என்பதை விஜய் முடிவு செய்யலாம்.

கூட்டணி பேரம்: தேர்தல் முடிவுக்குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை
கிடைக்காத பட்சத்தில், 'விசில்' சின்னத்தின் ஆதரவு இன்றி யாரும் ஆட்சி
அமைக்க முடியாத நிலை உருவாகும். சுருக்கமாகச் சொன்னால், 2026-ல் புனித
ஜார்ஜ் கோட்டையின் சாவி விஜய்யின் கையில் இருப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+