நிலப் பத்திரம் அப்பா பெயரில்.. ஆனால் பட்டா வேறு ஒருவர் பெயரில்.. அதை அப்பா பெயரில் மாற்ற முடியுமா?
சென்னை: இன்றைக்கு நிலம் வாங்குவோர், வீடு வாங்குவோர் பத்திரம், பட்டா விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.. அதனால் பழைய சிக்கல்களை இப்போது கண்டுபிடித்து தீர்வு காண நினைக்கிறார்கள்.. அப்படித்தான் சென்னை புறநகர் பகுதியில் ஒருவர் நிலம் அப்பா பெயரில் இருந்திருக்கிறது. ஆனால் பட்டாவோ அவரது அப்பா பெயரில் இல்லாமல் வேறு ஒருவர் பெயரில் இருந்துள்ளது. இவர் தனது அப்பா பெயரில் மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
பொதுவாக அந்த காலக்கட்டத்தில் பத்திரப்பதிவு செய்த உடனேயே பட்டா வாங்கும் வழக்கம் இருந்தது இல்லை. பத்திரப்பதிவு செய்துவிட்டு அப்படியே விட்டுவிடுவார்கள். எனக்கு தெரிந்து ஒருவர் சென்னை புறநகர் பகுதியில் 90களில் நிலம் வாங்கினார். ஆனால் பட்டா வாங்கவே இல்லை.. அவரது பிள்ளைகள் இன்று பட்டாவை அப்பா பெயரில் மாற்ற தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்கள். நீண்ட போராட்டத்திற்கு பிறகு பட்டா கிடைத்தது.. எனவே பத்திரப்பதிவு செய்த உடனேயே பட்டா வாங்கிவிடுவது நல்லது.

சரி விஷயத்திற்கு வருவோம். பொதுவா நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்தவர்கள் பட்டா வாங்குவதற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.அதாவது நீங்கள் பட்டா பெயர் மாற்றம் செய்ய நிலத்தின் உரிமையாளர் யார் என்பதற்கான ஆவணத்தையும், அதற்கு முந்தைய ஆவணத்தையும் ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தாசில்தார் அலுவலகம் சென்று அங்குள்ள இ-சேவை மையம் மூலமாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் ஏரியா மாநகராட்சியா அல்லது கிராமமா என்பதை அறிந்து அதற்கு உரிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பத்தை பதிவு செய்து ரூபாய் 60 கட்டணம் பெற்றுக்கொண்டு ரசீது வழங்குகிறார்கள்.
அந்த ரசீதைப் பெற்றுக்கொண்டு சில நாட்கள் கழித்து நில நிர்வாக ஆணையரின் இணையத்திலேயே விண்ணப்பத்தின் நிலையை அறியலாம்.. நீங்கள் விண்ணப்பித்தபடி உங்கள் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருந்தால் அப்படியே ஒரு நகல் எடுத்துக் கொள்ளலாம். அதுதான் ஒரிஜினல் பட்டா.. அதை வைத்து கொள்ளுங்கள். ஒருவேளை பட்டாவை உங்களுக்கு டவுன்லோடு செய்ய தெரியவில்லை என்றால் இசேவை மையம்மூலம் பட்டாவை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்..
அதேநேரம் பட்டாவிற்கு இ சேவை மையங்களில் போய் விண்ணப்பிக்க முடியாதநிலை இருந்தால், கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று விண்ணப்பிக்கலாம். ஏனெனில் தாசில்தார் அலுவலகத்தில் பட்டா கேட்டு போனாலும், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சர்வேயர் ஆகியோர் நேரில் வந்து பார்த்து சொத்தின் உரிமையாளரை உறுதி செய்து அதாவது புலத்தணிக்கை செய்தால் தான் தாசில்தார் பட்டா தருவார் . ஒருவேளை பட்டாவிற்கு மாற்றம் செய்து 15 நாட்கள் கடந்தும் உங்கள் அப்பா பெயரில் மாறவில்லை என்றால், சட்டத்தை கையில் எடுங்கள்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி ஒரு விண்ணப்பம் எழுதுங்கள். அந்த விண்ணப்பம் எப்படி இருக்க வேண்டும் என்றால், இந்த தேதியில் பட்டா கேட்டு விண்ணப்பம் செய்தேன். அந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?எப்பொழுது எனக்கு பட்டா வழங்கப்படும்? பட்டா வேண்டி விண்ணப்பம் செய்த எத்தனை நாட்களுக்குள் பட்டா வழங்கப்பட வேண்டும் என்று அரசு விதி உள்ளதோ அந்த விதிகளின்படி உரிய காலத்திற்குள் எனக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? கடந்த ஒரு மாதத்தில் எத்தனை பேர் பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள்? எத்தனை பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது? என்பது போன்ற உரிய தகவல்களை கேட்டு பதிவுத் தபாலில் அனுப்புங்கள்..
அப்படி அனுப்பினால் கண்டிப்பாக விரைவில் பட்டா கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பொதுவாக இதுபோன்ற சூழலில் பட்டா பெயர் மாற்றம் மட்டும் என்றால் விரைவில் கிடைக்கும்.நிலத்தை உட்பிரிவு செய்து அளந்து பார்த்து புதிய சர்வே எண் வழங்கி பட்டா கொடுக்க வேண்டுமென்றால் பல நாட்கள் காலதாமதம் ஆகிறது. பொதுவாக நிலத்தை அளந்து 30 நாளில் உட்பிரிவு பட்டா வழங்க வேண்டும். அப்படி வழங்காவிட்டால் உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி நீங்கள் சட்டப்படி அவரிடம் அணுகலாம்.. விடாமல் அலைந்துதான் பட்டாவை வாங்க வேண்டியதிருக்கும்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications