நேரம் முடிய போகுது! உங்க கிட்ட ஆதார், பான் கார்ட் இருக்கா? முதல்ல இதை படிங்க! நெருங்கும் கால அவகாசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதற்கான இறுதி தேதியையும் அறிவித்துள்ளது. இந்த இறுதி தேதிதான் தற்போது நெருங்கி வருகிறது.

ஆதார் கார்ட் தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்ட் முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.

மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்ட் முக்கியம் ஆகி உள்ளது. முக்கியமாக மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது. இதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது. தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் இருக்கின்றனர். இதில் 67 ஆயிரம் பேரை தவிர மற்ற எல்லோரும் ஆதாரை இணைத்துவிட்டனர்.

The last date, exemptions for linking Pan Number with Aadhaar number: All you need to know

இந்த நிலையில்தான் நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. பான் கார்ட் என்பது நம்முடைய நிரந்தர கணக்கு எண் ஆகும். நமது அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று அனைத்துடனும் இந்த எண் இணைக்கப்பட்டு இருக்கும். லோன் எடுக்க, வருமான வரி தாக்கல் செய்வது, வங்கியில் அதிக அளவு பண பரிவர்த்தனை செய்வது போன்ற செயல்களுக்கு பான் கார்ட் அவசியம். நம் வரவு செலவு அனைத்தும் இதன் மூலமே கண்காணிக்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் பான் கார்ட் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக கால அவகாசம் ஏற்கனவே பல முறை நீட்டிக்கப்பட்டுவிட்டது. பல முறை இந்த அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மார்ச் 31ம் தேதி வரை இதற்கான அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதற்குள் உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும். அதாவது அந்த எண் டீ ஆக்டிவேட் ஆகிவிடும். அப்படி ஆகும் பட்சத்தில் நீங்கள் பணம் அனுப்புவது தொடங்கி லோன் எடுப்பது, வருமான வரி தாக்கல் செய்வது வரை எல்லாம் சிக்கலாகும். சிக்கலாகும் என்பதை விட மொத்தமாக இந்த பணிகளை செய்வது இயலாத காரியம்.

இதில் கட்டணம் இன்றி பான் அட்டையை இணைக்க ஜூன் 30ம் தேதியுடன் நேரம் முடிந்துவிட்டது. அதன்பின் வரும் மார்ச் 31ம் தேதி வரை கட்டணத்துடன் 1000 ரூபாய் செலுத்தி பான் அட்டையை இணைக்க முடியும். இப்படி செய்யவில்லை என்றால் 4 நாட்கள் கழித்து பான் அட்டை செயல் இழந்து விடும். பல்வேறு விதமான பரிவர்த்தனை செயல்பாடுகள் இதனால் பாதிக்கப்படும்.

The last date, exemptions for linking Pan Number with Aadhaar number: All you need to know

அதே சமயம் இந்த கட்டாய விதியில் இருந்து சிலருக்கு விலக்கும் அளிக்கப்பட்டு உள்ளது. பின்வரும் நபர்களுக்கு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது.

1. அஸ்ஸாம், மேகாலயா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் வசிப்பவர்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது.

2. வருமான வரிச் சட்டம், 1961 இன் படி குடியுரிமை பெறாதவர் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது.

3. முந்தைய ஆண்டில் எண்பது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது. அதாவது கடந்த வருடம் உங்களுக்கு 80 வயது ஆகி இருந்தால் இதை இணைப்பது கட்டாயம் கிடையாது.

4. இந்திய குடிமகன் அல்லாதவர்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது. வெளிநாட்டில் இருந்து வந்து இங்கே இருக்கும் பட்சத்தில் உங்களிடம் பான் அட்டை இருந்தாலும் அதை இணைக்க வேண்டியது இல்லை. ஏனென்றால் உங்களிடம் ஆதார் இருக்காது.

5. ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட நபர்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது என்றாலும் இவர்கள் விருப்பம் இருந்தால் இணைக்கலாம்.

பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவுசெய்யாத பயனர்கள் இருவரும் தங்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலில், முன் உள்நுழைவு மற்றும் பின் உள்நுழைவு முறையில் இணைக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+