திக்திக் நிமிடங்கள்! மதுரையிலிருந்து பறந்து வந்த கல்லீரல்..! “சென்னையில் ஒருநாள்” பாணியில் பரபரப்பு!
சென்னை : "சென்னையில் ஒரு நாள்" சினிமா பட பாணியில் மதுரையில் இருந்து தானமாக பெறப்பட்ட ஒருவரது கல்லீரல், சென்னையில் உள்ள ஒருவருக்கு 8 மணி நேர அறுவை சிகிச்சையில் பொருத்தி ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
Recommended Video
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த சத்திய நாராயணன் என்பவர் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது கல்லீரல் செயலிழந்தது.
இதன் காரணமாக சென்னையில் முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கல்லீரல் மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கல்லீரல் தானம்
இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக பதிவு செய்திருந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரை மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

விமானத்தில் வந்த கல்லீரல்
மூளை செயலிழந்த அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது உறவினர்கள் முன்வந்த நிலையில் மதுரையில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு கல்லீரல் கொண்டு வரப்பட்டது. இந்த கல்லீரலை சென்னையில் ஒரு நாள் சினிமா பட பாணியில் ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு வரப்பட்டது.

அறுவை சிகிச்சை வெற்றி
30க்கும் மேற்பட்ட மருத்துவர்களின் உதவியோடு 8 மணி நேர போராட்டத்திற்கு பின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. கல்லீரல் மாற்று சிகிச்சை செய்வதற்கு முன்னதாக தானம் வழங்கப்படும் நபரின் ரத்தமும் கல்லீரல் மாற்று செய்யப்படக்கூடிய நபரின் ரத்தமும் ஒன்றாக இருந்தது.

மருத்துவர்களுக்கு பாராட்டு
அவருடைய பதிவின் அடிப்படையில் மாற்று சிகிச்சை செய்வதற்கு முன்னதாக ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் சார்பாக அனைத்து ஏற்பாடுகளையும் விரைவாக செய்யப்பட்டிருந்த நிலையில் கல்லீரல் வந்தவுடன் உடனடியாக விரைந்து செயல்பட்ட மருத்துவர்கள் 30க்கும் மேற்பட்ட குழுவினர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நிறைவு செய்தனர். இதனையடுத்து மருத்துவக் குழுவினரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications