வங்கி லாக்கரில் தங்கம் உள்பட எது இருந்தாலும்.. 100 மடங்கு இழப்பு ஏன்.. நிர்மலா சீதாராமன் விளக்கம்
டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் வங்கி லாக்கர் பாதுகாப்பு மற்றும் இழப்பீடு குறித்து நேற்று விளக்கம் அளித்தார். வங்கி லாக்கர்களில் இழப்பு ஏற்படும் பட்சத்தில், லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு அந்த லாக்கரின் வருடாந்திர வாடகையைப் போல 100 மடங்கு என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டை வங்கிகள் வழங்குவதற்கான காரணத்தை விவரித்தார்.
வங்கிக் கொள்கைகளின்படி, உங்கள் லாக்கரில் உள்ள பொருட்கள் திருடு போனாலோ அல்லது இயற்கைச் சீற்றம், தீ விபத்து போன்ற காரணங்களால் சேதமடைந்தாலோ வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீடு என்பது, வங்கி லாக்கருக்கான வருடாந்திர வாடகையைப் போல 100 மடங்கு தொகை தான். உங்கள் லாக்கர் வாடகை ₹10,000 என்றால், இழப்பீடு ₹10 லட்சம்.. நீங்கள் ஒரு கோடிக்கு அதில் நகை வைத்திருந்தாலும் லாக்கர் வாடகையின் 100 மடங்கு தான் கிடைக்கும். ஏன் இப்படியான முரண்டுபாடு என்பது குறித்த கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று விளக்கம் அளித்தார்.

நிர்மலா சீதாராமன் விளக்கம்
அப்போது அவர் கூறும் போது, "வங்கி லாக்கர்களில் இழப்பு ஏற்படும் பட்சத்தில், லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு அந்த லாக்கரின் வருடாந்திர வாடகையைப் போல 100 மடங்கு என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டை வங்கிகள் வழங்குகின்றன. லாக்கர்களில் உள்ள பொருட்கள் என்ன என்பதை வங்கிகள் அறியவோ அல்லது மதிப்பீடு செய்யவோ மாட்டாது என்பதாலும், வாடிக்கையாளர்களிடம் உள்ளே இருக்கும் மதிப்புமிக்கப் பொருட்களைப் பற்றித் தெரிவிக்குமாறு கேட்பது வங்கியின் ரகசியக் காப்பு நெறிமுறைகளை மீறுவதாகும் என்பதாலும் இந்த வரம்பு உள்ளது."
நான்கு பாயிண்ட்
ஒவ்வொரு பொருளின் மதிப்பீடு அல்லது காப்பீடு செய்வது சாத்தியமற்றது என்பதால், ஒரு தரப்படுத்தப்பட்ட இழப்பீட்டு கட்டமைப்பு பயன்படுத்தப்படுகிறது. தனிப்பட்ட மதிப்பிற்கு ஏற்ப கூடுதல் பாதுகாப்பு கோருவது, உள்ளே இருக்கும் பொருட்களை வெளிப்படுத்துவதைக் கட்டாயமாக்கும்; ஆனால் வங்கி விதிகள் அதை அனுமதிக்காது." என்றார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய இந்த விளக்கத்தை நான்கு முக்கிய பாயிண்டுகளாக நாம் விரிவாக பார்க்கலாம்.
உங்களுக்கு வங்கிகள் தரும் இழப்பீடு எவ்வளவு
பொதுவாக நீங்கள் வங்கி லாக்கரில் உள்ள பொருட்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அந்த லாக்கருக்கு ஆண்டுதோறும் கட்டும் வாடகையைப் போல 100 மடங்கு தொகையை வங்கி உங்களுக்கு இழப்பீடாக வழங்கும். உதாரணமாக, உங்கள் லாக்கர் வாடகை ஆண்டுக்கு ₹3,000 என்றால், இழப்பீடு ₹3,00,000 வரை கிடைக்கும். உங்கள் லாக்கர் வாடகை ₹6,000 என்றால், இழப்பீடு ₹6 லட்சம். உங்கள் லாக்கர் வாடகை ₹10,000 என்றால், இழப்பீடு ₹10 லட்சம் ஆகும்.
விதிகளும் அனுமதிக்காது
வாடிக்கையாளர்கள் லாக்கருக்குள் என்ன வைத்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்லச் சொல்வது, வங்கியின் 'ரகசிய காப்பு' விதிகளுக்கு எதிரானது. நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டால் அது உங்கள் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவது போலாகும். எனவேதான் வங்கி அதை கேட்பதில்லை.
Banks provide locker holders compensation fixed at 100 times the annual locker rent in case of loss.
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) March 30, 2026
This limit exists because banks do not know or assess the contents of lockers and asking customers to disclose valuables would violate banking confidentiality norms.
Since… pic.twitter.com/ctoJKjs0xK
பொருட்களுக்கு தனி காப்பீடு இல்லை
ஒவ்வொரு பொருளின் மதிப்பிற்கு ஏற்ப தனித்தனியாக இன்சூரன்ஸ் வழங்க வேண்டுமானால், நீங்கள் லாக்கருக்குள் வைக்கும் ஒவ்வொரு பொருளையும் வங்கியிடம் காண்பித்து அதன் மதிப்பைச் சொல்ல வேண்டியிருக்கும். இது வங்கி விதிகளின்படி அனுமதிக்கப்படுவது இல்லை. எனவே, அனைவருக்கும் பொதுவான ஒரு இழப்பீட்டு முறையை வங்கி பின்பற்றுகிறது.
- வேட்பு மனுக்களை என்னென்ன காரணங்களுக்கு நிராகரிக்க கூடாது? தேர்தல் ஆணையம் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்
- 75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள்
- டெல்லியை துறந்து டார்கெட் 2026! திருமாவளவன் திடீர் முடிவின் பின்னணியில் இருக்கும் பலமான ஸ்கெட்ச் இதுதானா?
- முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு
- வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம்
லாக்கர் இன்சூரன்ஸ்
லாக்கரில் உள்ள பொருட்களின் மதிப்பு வங்கிக்குத் தெரியாது என்பதால், 'பொருட்களின் மதிப்புக்கு ஏற்ப இழப்பீடு' தர முடியாது. அதற்குப் பதிலாக, 'வாடகையின் அடிப்படையில் 100 மடங்கு' என்ற கணக்கில் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதன் மூலம் உங்கள் ரகசியமும் காக்கப்படுகிறது, அதே சமயம் இழப்பு ஏற்பட்டால் ஒரு குறிப்பிட்ட தொகையும் கிடைக்கிறது. வங்கி தரும் இந்த 100 மடங்கு இழப்பீடு என்பது ஒரு பாதுகாப்புதான். ஆனால், நீங்கள் மிக அதிக மதிப்புள்ள பொருட்களை வைத்திருந்தால், தனியாக ஒரு "Locker Insurance" எடுத்துக்கொள்வது உங்கள் சொத்துக்களுக்கு இன்னும் கூடுதல் பாதுகாப்பைத் தரும் என்கிறார்கள்.
-
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
அய்யோ.. அக்கவுண்டில் அநாமத்தாக வந்த 10 கோடி! ஒரே நொடியில் கோடீஸ்வரியான பெண்! உடனடியாக எடுத்த முடிவு -
உங்க அசல் ஆவணம் வங்கியில பத்திரமா இருக்கா? கோவையில் பகீர்.. 13 லட்சம் அபராதம் தந்த கோர்ட் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!













Click it and Unblock the Notifications