Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு ஓடி வந்த காதல் ஜோடி.. 2 கே கிட்ஸ் அறிய வேண்டிய மிகப் பெரிய பாடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர், கண்ணாரம்பட்டு பகுதியை சேர்ந்த காதலர்கள், விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படித்துள்ளார்கள். கல்லூரி விடுமுறை என்பதால் சென்னையில் தற்காலிகமாக வேலை செய்ய போகிறோம் என்று கூறி பெரம்பூருக்கு வந்துள்ளனர். புதிதாக திருமணமான தம்பதி போல் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்துள்ளனர். உணர்ச்சி வேகத்தில் காதலன் எடுத்த தவறான முடிவால் வாழ்க்கையே முடிந்துவிட்டது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

காதலர்கள் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்ட ஓடி வருகிறார்கள். சென்னை, திருப்பூர், கோவை, பெங்களூர் போன்ற பகுதிகளில் குடியேறுகிறார்கள்.ஆசை 60 நாள், மோகம் 30 நாள் என்பது போல், கொஞ்ச நாளிலேயே வாழ்க்கையின் எதார்த்தம் புரிய தொடங்குகிறது. பெற்றோர் ஏற்றுக்கொண்டால் ஓரளவு பிரச்சனை குறையும்.

The lovers who ran away from Villupuram to Chennai 2K Kids need to learn the biggest lesson

மாறாக பெற்றோருக்கு தெரியாமல் அல்லது பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்யும் காதல் ஜோடிகள், வாழ்க்கையை சரியாக புரிந்து கொள்ளாமல் சின்ன விஷயத்திற்கு எல்லாம் கோபப்பட்டு, வாழ்க்கையில் தவறான முடிவெடுக்கிறார்கள். 2 கே கிட்ஸ் சிலர் வாழ்க்கையில் இப்படி தவறான முடிவெடுப்பது அதிகமாக உள்ளது. விழுப்புரம் காதல் ஜோடி பெற்றோரை ஏமாற்றி விட்டு சென்னையில் குடியேறி சில நாளிலேயே வாழ்க்கையை தொலைத்துள்ளார்கள். அவர்கள் இருவருமே இன்று உயிருடன் இல்லை. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர், கண்ணாரம்பட்டு பகுதியை சேர்ந்த 19 வயதாகும் ஆகாஷ் என்பவர் விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் அபிநயா (19). அதே கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஆகாஷூம், அபிநயாவும் காதலித்து வந்துள்ளனர். கல்லூரி விடுமுறை என்பதால் சென்னையில் தற்காலிகமாக வேலை செய்ய போகிறோம் என பெற்றோரிடம் கூறிவிட்டு 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

கடந்த வாரம் 2 பேரும் சென்னை வந்து தங்களை புதிதாக திருமணம் முடிந்த தம்பதி போல காட்டிக்கொண்டு பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆகாஷின் நணபர் வீடு எடுத்து கொடுத்து உதவி உள்ளார்.. நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் பக்கத்து வீட்டில் வசிப்பவர் தற்செயலாக ஜன்னல் வழியாக பார்த்த போது ஆகாஷ் தூக்கில் தொங்கியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த ஐ.சி.எப். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ஆகாஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், அபிநயா ரத்த காயங்களுடன் வாயில் நுரை தள்ளியவாறு தரையில் இறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைத்தனர். உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைகு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ஆகாஷ் உறவினர் ஒருவர், 2 பேருக்கும் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்திருக்கிறார். நேற்று முன்தினம் காலை காதல் ஜோடி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த ஆகாஷ், அபிநயாவை அடித்து கொலை செய்து விட்டு தானும் வாழ்க்கையை முடித்துக் கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து இரு வீட்டார் குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த காதல் ஜோடியின் பெற்றோரிடம் விசாரித்த பின்னரே முழுமையான தகவல் தெரிய வரும் என போலீசார் கூறினார்கள். காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் பெரம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. உணர்ச்சி வேகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பொதுவாகவே தவறாக முடியும். அந்த வகையில் காதல் ஜோடிக்கு எமனாக மாறி உள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+