செம்மஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனை உடனே இடிக்க வேண்டும்.. கண்டித்த நீதிபதிகள்... ஐகோர்ட் கெடு
சென்னை: செம்மஞ்சேரி போலீஸ் நிலையம் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாகவும், அதை அகற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் போலீஸ் ஸ்டேஷனை அகற்ற வேண்டும் என்றும், போலீஸ் நிலையத்தை உடனே அகற்றவில்லை என்றால் அனைத்து கட்டுமானங்களையும் அகற்ற உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தனர்.
நீர்நிலைகளையும், நீர் வழித்தடங்களையும் ஆக்கிரமித்து எந்தக் கட்டடமும் கட்டக்கூடாது என்பது நீதிமன்றத்தின் மிகத்தெளிவான விதிமுறையாக இருக்கிறது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் சட்ட விதிமுறைகளை மீறி, செம்மஞ்சேரி ஜே.ஜே. நகர் பகுதியில் உள்ள ஒரு நீர்ப்பிடிப்பு கால்வாயின் மீது இந்தக் காவல் நிலையம் கட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், நீர்நிலை ஆக்கிரமிப்பு காரணமாக மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.

இதையடுத்து "சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல் துறையே நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டடம் கட்டுவது ஏற்கத்தக்கதல்ல" என்று நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது. மேலும், "நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது, ஆனால் அரசே ஆக்கிரமிப்பாளராக இருக்கக்கூடாது" என்றும் நீதிபதிகள் முன்பு கூறியிருந்தனர். மேலும் அந்தக் காவல் நிலையத்தை அகற்றிவிட்டு, நீர்நிலைக்குப் பாதிப்பு இல்லாத மாற்று இடத்தில் புதிய காவல் நிலையத்தைக் கட்ட அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்த வழக்கில் விரிவான வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், போலீஸ் நிலையத்தை உடனே அகற்றவில்லை என்றால் அனைத்து கட்டுமானங்களையும் அகற்ற உத்தரவிட நேரிடும். மேலும் நீர்நிலைகளை வகை மாற்றம் செய்த அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவோம். இந்த வழக்கை வருகிற 27-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்'' என்று உத்தரவிட்டனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications