சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரோலிங் சேரில் வியாபார உலகை சுற்றிய பிஸ்னஸ் மேக்னட்.. தொட்டதெல்லாம் வெற்றி.. யார் இந்த வசந்தகுமார்?!

தமிழக பிஸ்னஸ் உலகில் தனக்கு என்று தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தவர் வசந்த் அண்ட் கோ நிறுவனர் வசந்தகுமார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பிஸ்னஸ் உலகில் தனக்கு என்று தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தவர் வசந்த் அண்ட் கோ நிறுவனர் வசந்தகுமார்.

Recommended Video

    தமிழகத்தின் பிஸ்னஸ் மேக்னட்.. யார் இந்த வசந்தகுமார்!? | Oneindia Tamil

    தமிழகத்தில் பெரிய அளவில் பிஸ்னஸ் வாய்ப்புகள் துளிர்விடாத காலம் அது . 70களின் இறுதியில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகம் மற்ற மாநிலங்களை விட வேகமாக முன்னேற தொடங்கியது. வாடா இந்தியாவிற்கு மாடலாக திகழும் வகையில் புதிய நிறுவனங்கள் தமிழகத்தில் உருவானது.

    அப்போது ரீ-டெயில் உலகில் உருவான நிறுவனம்தான் வசந்த் அண்ட் கோ. 1978ல் உருவாக்கப்பட்ட வசந்த் அண்ட் கோ நிறுவனம், வெறும் 10 ஆண்டுகளில் இந்தியாவில் இருக்கும் பெரிய பிஸ்னஸ் நிறுவனங்களுக்கு எல்லாம் ரோல் மாடலாக மாறியது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட.. கன்னியாகுமரி காங்.எம்.பி. எச். வசந்தகுமார் மரணம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட.. கன்னியாகுமரி காங்.எம்.பி. எச். வசந்தகுமார் மரணம்

    எப்போது பிறந்தார்

    எப்போது பிறந்தார்

    வசந்த் அண்ட் கோ நிறுவனத்தை உருவாக்கிய ஹரி கிருஷ்னன் வசந்தகுமார் 1950 ஏப்ரல் மாதம் 14ம் தேதி பிறந்தார். கன்னியாகுமரியில் இருக்கும் அகஸ்தீஸ்வரம் தொகுதியில் இவர் பிறந்தார். ஹரிகிருஷ்னன் மற்றும் தங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக இவர் பிறந்தார். அதன்பின் தனது 28 வது வயதில் இவர் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தை தொடங்கினார்.

    சமயம்

    சமயம்

    பெரிய அளவில் தென்மாவட்டங்களில் வாய்ப்பு இல்லாத சமயத்தில் பர்னிச்சர் துறையில் கால் பதித்தவர்தான் வசந்தகுமார். பெரிய பொருளாதார பின்னணி இன்றி , வாழ்க்கையில் வெற்றிபெற குடும்ப பின்னணி தேவையில்லை என்பதை நிரூபித்தவர் வசந்தகுமார். தான் நிறுவனம் தொடங்கி வெறும் 10 வருடங்களில் தமிழகம் முழுக்க பல்வேறு கிளைகளை கொண்டு வந்தவர்.

    பல கிளைகள்

    பல கிளைகள்

    தமிழகம், பெங்களூர், பாண்டிச்சேரி, ஆந்திர பிரதேசம், டெல்லி என்று பல நகரங்களில் வசந்த் அண்ட் கோ கிளையை கொண்டு வந்து பல பெரிய நிறுவனங்களை வாய் பிளக்க வைத்தவர் . முழுக்க முழுக்க தன்னுடைய பிஸ்னஸ் திறமை மூலம் முன்னேறிவர்தான் வசந்த்குமார். பெரிய அளவில் பண பின்னணி இன்றி, எம்பிஏ போன்ற கவர்ச்சி படிப்புகள் இன்றி சாதனைகளை செய்ய முடியும் என்று நிரூபித்தவர் வசந்தகுமார்.

    ரோல் மாடல்

    ரோல் மாடல்

    அதிலும் வடஇந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள் பல இவரின் விளம்பர யுக்தியை காப்பி அடித்தது. டிவி, பர்னிச்சர் எல்லாம் பணக்காரர்களுக்கு என்று இருந்த நிலையை மாற்றியவர், கவர்ச்சி ஆபர்கள் மூலம் தமிழகத்தின் அனைத்து மூலைகளுக்கு தனது கடைகளை கொண்டு சென்றார். ரோலிங் சேரில் சிரித்தபடி சுற்றியே இவர் பல தமிழக மக்களின் மனங்களை கவர்ந்தவர்.

    அரசியல் எப்படி

    அரசியல் எப்படி

    பிசினஸ் மட்டுமின்றி அரசியலிலும் தனக்கு என்று தனி முத்திரை பதித்தவர். தென் மாவட்டங்களில் காங்கிரஸ் வளர்ச்சி அடைய முக்கிய காரணமாக பார்க்கப்பட்டார். தென் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் முகமாக பார்க்கப்பட்டார். எம்எல்ஏ தேர்தலோ , எம்பி தேர்தலோ வசந்த குமார் நின்றால் வெற்றிபெறுவார் என்று எல்லோரும் உறுதியாக நம்பும் அளவிற்கு தனது அரசியல் பலத்தை அங்கு உறுதியாக வளர்த்து கொண்டு வந்தவர்தான் வசந்தகுமார்.

    2006 எம்எல்ஏ

    2006 எம்எல்ஏ

    2006ல் முதல்முறையாக எம்எல்ஏவாக தமிழக சட்டசபைக்கு வந்தார். நாங்குநேரி தொகுதியின் பலம் வாய்ந்த வேட்பாளராக திகழ்ந்தார். அதேபோல் தமிழக காங்கிரசின் துணை தலைவராகவும் இருந்துள்ளார். 2016 நாங்குநேரி தொகுதியில் மீண்டும் எம்எல்ஏ ஆனார். அதன்பின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு , 2019 லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரியில் நின்று காங்கிரஸ் எம்பி ஆனார்.

    மரணம் அடைந்தார்

    மரணம் அடைந்தார்

    இந்த நிலையில் தமிழக பிசினஸ் உலகில் சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆண்ட கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் இன்று காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட வசந்தகுமாருக்கு வயது 70. சென்னையில் சிகிச்சை பலனின்றி கொரோனாவிற்கு மரணம் அடைந்தார். ஆகஸ்ட் 10 முதல் கொரோனா காரணமாக வசந்த குமார் பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் இன்று மரணம் அடைந்தார்.

    English summary
    The man who is role model for retail business: Who is Vasanthakumar from Kanniyakumar?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X